Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, January 25, 2026

பிரம்மாண்டமாய் நடைபெற்ற சேலம் சிறப்பு கருத்தரங்கம்!


BSNLEU - AIBDPA - TNTCWU சேலம் மாவட்ட சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு, CoC சார்பாக 24.01.2026 அன்று சேலம் செவ்வை தொலைபேசி நிலைய கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு கருத்தரங்கம் பிரம்மாண்டமாய் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, தோழர் R. ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர், BSNLEU தலைமை தாங்கினார். தோழர் S. ஹரிஹரன், மாவட்ட செயலர், BSNLEU வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். தோழர் M. சண்முகம், மாநில அமைப்பு செயலர், BSNLEU, கருத்தரங்கை முறைப்படி துவக்கி வைத்தார். தோழர் C. பாஸ்கர், மாநில பொருளர், TNTCWU, தோழர் S. தமிழ்மணி, மாவட்ட செயலர், AIBDPA, தோழர் M. செல்வம், மாவட்ட செயலர், TNTCWU, தோழர் S. அழகிரிசாமி, மாநில அமைப்பு செயலர், AIBDPA, தோழர் E. கோபால், மாநில உதவி செயலர், AIBDPA ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

BSNLEU அகில இந்திய உதவி பொதுச் செயலர் தோழர் S. செல்லப்பா அவர்கள், எதிர் வரும் 12.02.2026 ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி  பேசினார். போராட்டத்தின் முக்கியத்துவமும் அதில் பங்கேற்ற வேண்டிய அவசியத்தையும், விளக்கினார். ஒன்றிய அரசாங்கம் கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத கார்ப்பரேட் ஆதரவு, நான்கு சட்டங்கள் சம்பந்தமாக விளக்கினார். அதில் உள்ள ஆபத்துகளை ஊழியர்கள் புரிந்து கொள்ளும் நோக்கில், வேலை நிறுத்த தயாரிப்பு உரை வழங்கினார். அதே போல், ஊழியர்களின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில், மூன்றாவது ஊதியம் மாற்ற ஒப்பந்தம் சம்பந்தமாகவும் சிறப்பாக விளக்கினார். 

150க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கமாக நடைபெற்றது. கருத்தரங்கில், 12.02.2026 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை, சேலம் மாவட்டத்தில், 100 சதவீதம் வெற்றி பெற செய்வது என ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது. கீழ்கண்ட தீர்மானங்கள், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

1.ஒரு நாள் வேலை நிறுத்தத்தில், BSNLEU தோழர்கள் முழுமையாக கலந்து கொள்வது. AIBDPA / TNTCWU தோழர்கள் மறியலில் பெருமளவு கலந்து கொண்டு, கைதாவது. 

2. ஒன்றிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள, நான்கு தொழிலாளர் விரோத  தொகுப்புக்களை கைவிட தொடர்ந்து வலியுறுத்துவது.

3. 01.01.2017 முதல் ஊதிய மாற்றம் ஏற்படுவதற்கு தடையாக உள்ள AFFORDABILITY பிரிவை ரத்து செய்ய, Unions and Associations of BSNL கொடுக்கும் இயக்கங்களை, சேலம் மாவட்டத்தில் வெற்றிகரமாக அமுல்படுத்துவது. 

4. 01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றம் அமுல்படுத்தவேண்டும் 

5. ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது. EPF / ESI உள்ளிட்ட, சமூக நல சலுகைகள் உறுதிப்படுத்த வேண்டும் 

6. நடைபெற்று வரும் இந்த நிதி ஆண்டில், வருவாயை அதிகரிக்க, சேலம் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது. 

7. வாடிக்கையாளர்களுக்கு தரமான 4G / 5G சேவைகள், தங்கு தடையின்றி,  உறுதி செய்யப்பட வேண்டும். வாடிக்கையாளர் சேவை மையங்களில் நிலவும் செயலி பிரச்சனைகள் முழுமையாக தீர்வு காண படவேண்டும். 

இறுதியாக, தோழர் P. சந்திரன், மாவட்ட அமைப்பு செயலர், BSNLEU நன்றி கூறி கருத்தரங்கை நிறைவு செய்தார். 

வரவேற்பு குழுவாக செயல்பட்டு, BSNLEU மாநாடோ என வியக்கம் விதத்தில், கொடிகள், தோரணங்கள் என அரங்க நுழைவு வாயிலை அழகு படுத்திய, BSNLEU செவ்வை / TNTCWU தோழர்களின் பணி சிறப்பானது. வந்திருந்த தோழர்களுக்கு சுவையான உணவு அன்போடு பரிமாறப்பட்டது.  

மாவட்டம் முழுவதிலும் இருந்து பெருவாரியான தோழர்களை திரட்டிய BSNLEU கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகளை மனதார பாராட்டுகிறோம். அதே போல், ஓய்வூதியர்களை பெருமளவு அழைத்து வந்த AIBDPA சங்க தலைவர்களின் பணி மகத்தானது. சிறப்பான ஏற்பாடுகளை செய்ய முழுமையாக உதவிய TNTCWU சங்க தலைவர்கள் / தோழர்களின் பணி போற்றுதலுக்குரியது.

தோழமையுடன்,
S. ஹரிஹரன், 
கன்வீனர், CoC.,