24.01.2026 BSNLEU மாவட்ட செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இன்று (29.01.2026) நமது மாவட்டத்தில், உறுப்பினர் சந்திப்பு இயக்கத்தை துவக்கியுள்ளோம். 12.02.2026 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்ய, உறுப்பினர் மத்தியில் ஆதரவு திரட்ட, இந்த இயக்கத்தை நாம் நடத்துகிறோம்.
முதலாவதாக, நாமகிரிப்பேட்டை CSC, பின் ராசிபுரம் CSC, அதற்குப் பின் திருச்செங்கோடு CoC சார்பாக, கிளைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பின் நாமக்கல் தொலைபேசி நிலையம் சென்று ஊழியர்களை சந்தித்து வேலை நிறுத்த ஆதரவு கோரினோம். திருச்செங்கோட்டில் CoC சார்பாக கிளை கூட்டம் நடைபெற்றது.
BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் M. சண்முகம், மாவட்ட பொருளர் தோழர் R. ரமேஷ், திருச்செங்கோட்டில் BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் K. சண்முகசுந்தரம், A. தாமரைச்செல்வன் கிளை செயலர் தோழர் V. பரந்தாமன் ஆகியோர் BSNLEU சார்பாக கலந்து கொண்டனர்.
AIBDPA சார்பாக மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜூ, கிளை செயலர் தோழர் M. ராஜலிங்கம், மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் V. கோபால், K. M. செல்வராஜூ, P. A. ஆறுமுகம், ராசிபுரம் கிளை செயலர் தோழர் P. M. ராஜேந்திரன், நாமக்கல் கிளை செயலர் தோழர் S. ராமசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.






























