Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, January 25, 2026

BSNLEU சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம்!


24.01.2026 அன்று, கருத்தரங்க உணவு இடைவேளைக்கு பின், நண்பகல் 2.30 மணி அளவில் அதே அரங்கில், BSNLEU சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தோழர் R. ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர், செயற்குழுவிற்கு, தலைமை தாங்கினார். தோழர் S. ஹரிஹரன், மாவட்ட செயலர், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, விளக்கவுரையாற்றினார். 

BSNLEU அகில இந்திய உதவி பொதுச் செயலர் தோழர் S. செல்லப்பா செயற்குழுவில் கலந்து கொண்டு, வேலை நிறுத்த போராட்டத்தின் அவசியத்தையும், அதை வெற்றி பெற செய்ய வேண்டியது நமது கடமை என்பதையும் மிக தெளிவாக விளக்கினார். BSNL நிறுவன சேவை அமைப்பு நிலை உள்ளிட்ட விஷயங்களை விளக்கினார். செயற்குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, பதில் வழங்கினார்.

BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் M. சண்முகம், AIBDPA மாநில உதவி செயலர் தோழர் E. கோபால், AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, TNTCWU சேலம் மாவட்ட செயலர்  தோழர் M. செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்படு பொருள் மீது செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.  

விவாதத்திற்கு பதில் அளித்து, மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கிய பின், கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது. 

1. 12.02.2026 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை, சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் வெற்றி பெற செய்வது. 

2. CoC முடிவின் அடிப்படையில், நான்கு மையங்களில், வேலை நிறுத்த ஆதரவு கிளை கூட்டங்களை, CoC சார்பாக நடத்துவது. (ஆத்தூர் கிளை நடத்திவிட்டது) 

3. BSNLEU மாவட்ட மையம் சார்பாக, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து BSNLEU உறுப்பினர்களையும் நேரில் சந்திப்பது, வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு பிரச்சாரம் மேற்கொள்வது.

4. BSNLWWCC, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு, சேலம் மாவட்ட குழு கூட்டத்தை, விரைந்து கூட்டுவது.   

5. BSNLCCWF டில்லி கருத்தரங்கிற்கு செல்லும், TNTCWU தோழர்களுக்கு உதவுவது.

தோழர் D. பிரசாத், மாவட்ட அமைப்பு செயலர், நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.  

தோழமையுடன்,
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்