08.01.2026 அன்று, நாடு முழுவதிலும் உள்ள, BSNL அலுவலகங்களில், (OA/BA மட்டங்களில்), உற்சாகமான, எழுச்சிகரமான, உணவு இடைவேளை ஆர்ப்பாட்டங்கள், வெற்றிகரமாக நடைபெற்றன. BSNLலில் உள்ள அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் விடுத்திருந்த, ஒன்றிணைந்த அறைகூவலின் அடிப்படையில், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கான முறையான அறிவிப்பு, 30.12.2025 அன்று, CMD BSNL இடம் வழங்கப்பட்டது. அந்தக் கடிதத்தில், ஊதிய உடன்பாட்டிற்கு, இயக்குனர் குழுவின் ஒப்புதலை உடனடியாக பெறாவிட்டால், போராட்டங்கள் தீவிரமாகும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
ஆனால், 08.01.2026 வரையிலுமே, இயக்குனர் குழுவின் ஒப்புதல் பெறப்படாமல், ஊதிய உடன்பாடு நிலுவையிலேயே இருந்தது. அத்துடன், நீண்ட காலமாக தேங்கி கிடக்கும், தமிழ்நாடு மற்றும் சென்னை பிரச்சனைக்கு ஒரு சமூக தீர்வு காண வேண்டும் என மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்த பின்னரும், அதனை BSNL நிர்வாகம், உதாசீனப்படுத்தி வந்தது. 08.01.2026 ஆர்ப்பாட்டத்தை, ஒத்தி வைக்க செய்வதற்கான முயற்சியாக, அன்று காலை, நிர்வாகம், ஒரு அவசர கூட்டத்தை கூட்டியது. அந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர்களோடு, DIRECTOR (HR) விவாதித்தார். அவருடன், PGM (SR), PGM (ESTT) மற்றும் PGM (LEGAL) ஆகிய, மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், ஊழியர்களின் வலுவான உணர்வுகளை, தலைவர்கள் பிரதிபலித்தனர்.
ஊதிய உடன்பாட்டிற்கு, இயக்குனர் குழுவின் ஒப்புதலை பெற வேண்டியது, காலத்தின் தேவை என்றும், தமிழ்நாடு மற்றும் சென்னை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதும், கட்டாயம் என்றும் பொதுச் செயலாளர்கள் தெளிவுபட தெரிவித்தனர். இந்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், போராட்டங்களை அடுத்த கட்டங்களுக்கு, தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு, தொழிற்சங்கங்கள் உள்ளாகும் என்றும் அவர்கள், எச்சரித்தனர்.
அந்தக் கூட்டம் முடிவடைந்ததும், பெருமளவில் திரண்டு இருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டத்தில், பொதுச் செயலாளர்கள் பங்கேற்றனர். கார்ப்பரேட் அலுவலகத்தின் EASTERN GATEல், திரண்டிருந்த பெரும் கூட்டம், BSNL ஊழியர்களின், ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டை பிரதிபலித்தது. ஊழியர்களுக்கான ஊதிய உடன்பாட்டிற்கு, BSNL இயக்குனர்கள் குழு ஒப்புதல் வழங்குவது மற்றும் ஊதிய மாற்றம், மற்றும் 3rd PRC ஆகியவற்றை அமுலாக்க தேவையான, AFFORDABILITY பிரிவை தளர்த்த, அரசாங்கம் சாதகமாக முடிவெடுக்கும் வரை, நமது ஒன்றுபட்ட போராட்டம் தளர்வின்றி, தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று தலைவர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும், சக்தி வாய்ந்த இயக்கத்தை நடத்திய அனைவருக்கும், பங்கேற்ற தோழர்களுக்கும், மத்திய சங்கம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
தோழர் அனிமேஷ் மித்ரா, GS., BSNLEU



