தபால், தந்தி, தொலைபேசி தொழிற் சங்க இயக்கங்களின் ஒப்பற்ற தலைவர் தோழர் K. G. போஸ் அவர்களின் 51வது நினைவு தினம், வருகிற 11.12.2025 (வியாழக்கிழமை) அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. AIBDPA 5வது அகில இந்திய மாநாடு வருகிற 17.12.2025, 18.12.2025 தேதிகளில், கோவையில், பிரம்மாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது. மாநாட்டு செய்தியை பிரகடனப்படுத்திடும் விதமாக, தமிழ் மாநிலம் முழுவதும் அனைத்து கிளைகளிலும், 11.12.2025 அன்று ஐந்து கொடிகள் ஏற்ற, AIBDPA மாநில செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நமது சேலம் மாவட்டத்தில், இந்த இயக்கத்தை வழக்கம் போல் CoC சார்பாக நடத்துவது என மாவட்ட மையத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள BSNLEU - TNTCWU சங்கங்களின் 9 கிளைகளிலும், AIBDPA சங்கத்தின் 11 கிளைகளிலும், இந்த இயக்கம், CoC சார்பாக நடை பெற வேண்டும். BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்கத் தோழர்களும், இந்த இயக்கத்தில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர், BSNLEU
S. தமிழ்மணி,
மாவட்ட செயலர், AIBDPA
M. செல்வம்,
மாவட்ட செயலர், TNTCWU
CoC சேலம்
குறிப்பு: சேலம் நகர கிளைகள் சார்பாக, 11.12.2025 அன்று காலை 10.30 மணியளவில் சேலம் மெயின் தொலைபேசி நிலையத்திலும், 11.00 மணியளவில் GM அலுவலகத்திலும், 11.30 மணியளவில் மெய்யனூர் தொலைபேசி நிலையத்திலும், ஐந்து கொடிகள் ஏற்றப்படும்.
