BSNL ஊழியர் சங்கத்தின் ராஜஸ்தான் மாநிலச் செயலாளர் தோழர் அசோக் பாரீக் அவர்கள், 09.12.2025 அன்று காலை காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கல்லீரல் நோய்க்காக சிகிச்சை எடுத்து வந்தார். தோழர் அசோக் பாரீக் பூரண உடல் நலத்துடன் திரும்ப வருவார் என்று நாம் நம்பிக்கையுடன் காத்திருந்த வேளையில் இந்த மறைவு செய்தி வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநில BSNL ஊழியர் சங்கத்தை ஒரு வலுவான சங்கமாகவும், போர்க்குணம் மிக்க சங்கமாகவும் உருவாக்குவதில் தோழர் அசோக் பாரீக், ஒரு மகத்தான பங்கினை ஆற்றியவர். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் தொழிற்சங்க இயக்கத்திற்காகவே அர்ப்பணித்தார். மிகச் சிறந்த நேர்மையாளர். அனைவரிடத்திலும் அன்பாகவும், தோழமையுடனும், மென்மையாகவும், பேசக்கூடியவர். அவர் நமது தொழிற்சங்க இயக்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். தோழர் அசோக் பாரீக் அவர்களின் மறைவு, தொழிற்சங்க இயக்கத்திற்கும், குறிப்பாக BSNL ஊழியர் சங்கத்திற்கும், மிகப்பெரிய இழப்பாகும்.
தோழர் அசோக் பாரீக் அவர்களின் மறைவிற்கு, சேலம் மாவட்ட BSNLEU சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
தோழர் அசோக் பாரீக் அவர்களுக்கு செவ்வணக்கம்.
வருத்தங்களுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
