Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, December 6, 2025

நிர்வாக குழு கூட்டத்தில் முன்வைப்பதற்கு, ஊதிய உடன்பாட்டு கோப்பு இறுதிபடுத்தப்படுகிறது!


அடுத்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிற நிர்வாக குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறுவதற்கு, சரியான திசை வழியில், ஊதிய உடன்பாட்டு கோப்பு நகர்கிறது என தெரியவந்துள்ளது. நிதி பிரிவு எழுப்பி வரும் தடங்கல்களை, பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா 25.11.2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில், CMD BSNLன் கவனத்திற்கு, கொண்டு வந்தார். நேற்றைய தினம் (05.12.2025), கார்ப்பரேட் அலுவலகத்தில் விசாரித்ததின் அடிப்படையில், இந்த தடங்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், CMD BSNL, பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்பது புரிய வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக அடுத்த வாரம் நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ள, நிர்வாக குழு கூட்டத்தில் முன்வைப்பதற்காக, ஊதிய உடன்பாட்டின் மீதான குறிப்பை, SR பிரிவு தயாரித்து வருகிறது. மேலும் காலதாமதம் இன்றி, ஊதிய உடன்பாட்டிற்கு நிர்வாக குழு கூட்டம், ஒப்புதல் தரும் என நாம் நம்புகிறோம்.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்