Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, November 4, 2025

CITUவின் அகில இந்திய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாநாடு.



2025, நவம்பர் 1 மற்றும் இரண்டாம் தேதிகளில், அகில இந்திய உழைக்கும் பெண்கள் உரிமை ஒருங்கிணைப்பு (CITU) குழுவின் 13 ஆவது மாநாடு, ஹைதராபாத்தில் நடைபெற்றது.  CITUவின் துணைத் தலைவரான தோழர் மெர்சி குட்டியம்மா செங்கொடியை ஏற்றியதுடன், இந்த மாநாட்டையும் தலைமை தாங்கி நடத்தினார். CITU பொதுச் செயலாளர் தோழர் தபன் சென், இந்த மாநாட்டில் துவக்க உரை ஆற்றினார்.  தோழர் A.R. சிந்து,  பொருளாய்வுக் குழுவில், வேலை அறிக்கையினை சமர்ப்பித்தார்.  

BSNLWWCC அமைப்பாளர் தோழர் K.N.ஜோதிலட்சுமி, இணை அமைப்பாளர் தோழர் அமிதா நாயக் மற்றும் குழு உறுப்பினர் பத்மாவதி ஆகியோர் BSNL ஊழியர் சங்கத்தின் சார்பாக, இந்த மாநாட்டில் சார்பாளர்களாக பங்கேற்றனர். இந்த மாநாட்டு விவாதத்தில் பங்கேற்ற, தோழர் ஜோதிலட்சுமி மற்றும் தோழர் அமிதா நாயக் ஆகியோர், BSNL ஊழியர் சங்க பதாகையின் கீழ் நடைபெற்ற, உழைக்கும் பெண்களின் போராட்டங்களை மையப்படுத்தி உரையாற்றினர்.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்