AGR நிலுவை வழக்கில், 2025, அக்டோபர், 27ஆம் தேதி, உச்சநீதிமன்றம், வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு சாதகமான ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. அந்தத் தீர்ப்பில், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை, அரசாங்கம் வைத்துள்ளதை கணக்கில் கொண்டு, இந்த தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. AGR என்பது, தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து, உரிமைக் கட்டணம், ஸ்பெக்ட்ரம் கட்டணம் உள்ளிட்டவைகளை, தொலை தொடர்பு துறை பெற்றுக் கொள்வதற்கான ஒரு நடைமுறை. AGR கணக்கிடுவது தொடர்பாக, தொலைத்தொடர்பு துறைக்கும், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் ஒரு தாவா இருந்தது. தொழில் சார்ந்த வருவாய்கள் அல்லாத, வாடகை, வட்டி உள்ளிட்டவைகள், AGR கணக்கிடுவதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தொலைத்தொடர்பு துறை கூறுகிறது. ஆனால், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. 2019 ஆம் ஆண்டு, அரசாங்கத்திற்கு சார்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, வோடபோன் ஐடியா நிறுவனம், அரசாங்கத்திற்கு, 58,000 கோடி ரூபாய்கள் கட்ட வேண்டும். ஆனால், வோடபோன் ஐடியா நிறுவனம், தனது சட்ட போராட்டத்தை தொடர்ந்தது. கடுமையான நிதி சிரமத்திற்கு உள்ளாகி உள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு, உச்ச நீதிமன்றத்தின் இந்த சமீபத்திய தீர்ப்பு, ஒரு நிவாரணம் வழங்கும் என பார்க்கப்படுகிறது.
தோழர் அனிமேஷ் மித்ரா, GS., BSNLEU
