Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, November 4, 2025

13.11.2025 அன்று, அவசர மத்திய செயற்குழு

 


தற்போதுள்ள, தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை, பெரிய அளவில் தடுக்கும் Shram Shakti NITI-2025ன் வரைவு கொள்கையை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  இந்தப் பிரச்சனை தொடர்பாக, ஊழியர்களை பயிற்றுவித்து, திரட்டும் வகையில் ஒரு பிரச்சார இயக்கத்தை நடத்த வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது. நமது நிறுவனத்தில் அடுத்த உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலை நடத்த, ஒரு புதிய கொள்கையினை, நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. மூன்றாவது ஊதிய மாற்ற பிரச்சனையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, கவனமாக கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

மேற்கண்ட முக்கியமான பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க, 13.11.2025 அன்று, BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு காணொளி காட்சி மூலம் நடைபெற உள்ளது.  

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 

 தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்