அரசாங்கம், "தேசிய வேலைவாய்ப்பு கொள்கை(DRAFT NATIONAL LABOUR EMPLOYMENT POLICY) - SHRAM SHAKTI NITI-2025" யின் நகலை வெளியிட்டது , தொழிற்சங்கங்களுக்கிடையே, மிகக் கடுமையான விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. புதிய கொள்கையை உருவாக்கும் பொழுது, மத்திய தொழிற்சங்கங்களிடம் எந்த ஒரு ஆலோசனையும் செய்யாமல், 2025, அக்டோபர், 8ஆம் தேதி, இந்தக் கொள்கை வெளியிடப்பட்டது. இந்தக் கொள்கை, தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சமூக பாதுகாப்புகளை காவு கொடுத்து, முதலாளிகளின் லாபத்தை பெருக்கும் விதமாக உள்ளது.
இது தொழிலாளி வர்க்கத்தின், வேலை நிலைமைகளை விவரிப்பது, தொழிலாளர்களின் அடிப்படை நடவடிக்கைகளுக்கான உரிமைகள், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்புகள் உள்ளிட்டவைகளின் மீது விடுக்கப்பட்டுள்ள சவால்களாகவே, தொழிற்சங்கங்கள் கருதுகின்றன. இந்த புதிய கொள்கை, தற்போதுள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை, நீர்த்துப் போகச் செய்யும் என தொழிற்சங்கங்கள் கருதுகின்றன.
இந்த SHRAM SHAKTI NITI-2025 கொள்கையினை எதிர்த்துப் போராடுவது என உறுதி ஏற்றுள்ள தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க, ஒன்றுபட்ட போராட்டத்தின் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளன.
தோழர் அனிமேஷ் மித்ரா, GS., BSNLEU
