BSNL ஊழியர்களுக்கு, 01.10.2025 முதல், 6.2% IDA உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த IDA உயர்விற்கான உத்தரவை, DPE, இதுவரை வெளியிடவில்லை. சாதாரணமாக, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும், IDA உயர்விற்கான உத்தரவை, DPE வெளியிடும். 01.10.2025 முதல் உயர்ந்துள்ள IDA வழங்குவதற்கான உத்தரவை வெளியிட, விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, DPE செயலாளருக்கு, BSNL ஊழியர் சங்கம், 24.10.2025 அன்று கடிதம் எழுதி உள்ளது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
