BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா, மற்றும் அகில இந்திய துணை தலைவர் தோழர் P.அபிமன்யு ஆகியோர், 16.10.2025 அன்று, மரு. கல்யாண் சாகர் நிப்பாணி, DIRECTOR (HR)அவர்களை சந்தித்து, கீழ்கண்ட பிரச்சனைகளை விவாதித்தனர்:-
1) பண்டிகை கால முன்பணம்.
தீபாவளியை கொண்டாடுவதற்கு, ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும் என கோரி, BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே, CMD BSNLக்கு கடிதம் எழுதி உள்ளது. இந்தப் பிரச்சனை தொடர்பாக CMD BSNLஉடன், 15.10.2025 அன்று விவாதிக்கப் பட்டது. ஒப்புதலை பெறுவதற்காக, தேவையான நடவடிக்கைகளை துவங்கும் முகமாக, இந்த பிரச்சனை மீண்டும், 16.10.2025 அன்று DIRECTOR (HR) உடன் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு பின், இரண்டு தலைவர்களும் திரு.S.P. சிங் PGM(ESTT) அவர்களையும் சந்தித்து, பண்டிகை கால முன்பணம் வழங்குவதற்கான பணிகளை துவக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
2) கேஷுவல் ஊழியர்களுக்கு, DA வழங்குவது.
கேஷுவல் ஊழியர்களுக்கு, ஜனவரி 2025 மற்றும் ஜூலை 2025 ஆகியவற்றிலிருந்து, இரண்டு தவணை DA வழங்கப்படவில்லை. இந்தப் பிரச்சனையை, நிர்வாகத்துடன் திரும்பத் திரும்ப, BSNL ஊழியர் சங்கம் விவாதித்து வருகிறது.
16.10.2025 அன்று, DIRECTOR (HR)ஐ சந்தித்து, தீபாவளிக்கு முன்னதாக, இந்த இரண்டு தவணை DAக்களையும் வழங்க வேண்டும் என, கேட்டுக் கொண்டனர். தேவையானவற்றை செய்வதாக, DIRECTOR (HR) உறுதியளித்தார்.
பின்னர், திரு.S.P. சிங் PGM(ESTT) அவர்களையும் சந்தித்து, இது தொடர்பாக விவாதித்தனர்.
3) ட்ராப்ட்ஸ்மேன் கேடருக்கு, சிறப்பு JTO இலாகா தேர்வு நடத்துவது.
எந்த ஒரு சிறப்பு JTO இலாகா தேர்வும் நடத்துவதற்கு, JTO தேர்வு விதிகளில் இடமில்லை என, கார்ப்பரேட் அலுவலகத்தின் RECRUITMENT பிரிவு தெரிவித்தது. எனவே, ட்ராப்ட்ஸ்மேன் கேடருக்கு சிறப்பு JTO இலாகா தேர்வு நடத்த, தேர்வு விதிகளை தளர்த்த, CGM (BW) முன்மொழிவு அனுப்ப வேண்டும். இந்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, திரு பரமேஸ்வரி தயாள் CGM (BW) அவர்களும் உடன் இருந்தார். ட்ராப்ட்ஸ்மேன் கேடருக்கு சிறப்பு JTO இலாகா தேர்வு நடத்துவதற்கான முன்மொழிவை துவக்குமாறு, அவருக்கு DIRECTOR (HR), அறிவுறுத்தினார்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்
