ஊதிய மாற்ற உடன்பாட்டை விளக்கி, நாடு முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும், 13.10.2025 முதல் 18.10.2025 வரை சிறப்பு கூட்டங்கள் நடத்த வேண்டும் என மத்திய சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது. அதன் அடிப்படையில், நேற்று (17.10.2025), சேலம் GM அலுவலகத்தில், சேலம் நகர கிளைகள் சார்பாக, ஊதிய மாற்ற உடன்பாட்டை விளக்கும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, தோழர் R. ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். GM அலுவலக கிளை தலைவர் தோழர் R. லோகநாதன், அனைவரையும் வரவேற்றார். சிறப்பு கூட்டத்தை, துவக்கி வைத்து , தோழர் E. கோபால், மாநில உதவி செயலர் AIBDPA துவக்கவுரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து, BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் S. ஹரிஹரன் சிறப்புரை வழங்கினார்.
கூட்டத்தில், GM அலுவலகம், மெயின், செவ்வை, மெய்யனூர் கிளை சங்க தோழர், தோழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். AIBDPA - TNTCWU தோழர்களும் கலந்து கொண்டனர். மாநில சங்கம் வெளியிட்ட, மத்திய சங்கத்தின் தமிழாக்கம் செய்யப்பட்ட ஊதிய மாற்ற ஒப்பந்த விளக்க குறிப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வில், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் K. சின்னசாமி, P. சந்திரன், C. லாவன்யா, உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு, மாநில குழு உறுப்பினர் தோழியர் D. கவிதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தோழர் J. ஸ்ரீனிவாசராஜு, மாவட்ட தணிக்கையாளர் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். மதிய உணவிற்கு பின், சேலம் MAIN CSCக்கு வந்து, நமது தோழர்களை சந்தித்து, விளக்கக் குறிப்பு வழங்கினோம்.

























