BSNLEU மற்றும் NFTE சங்கங்களின் அங்கீகாரம், 16.10.2025 அன்று நிறைவடைகிறது. 15.10.2025 அன்று, BSNL ஊழியர் பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் P.அபிமன்யு ஆகியோர், CMD BSNLஐ சந்தித்து, 10வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்றும் BSNLEU மற்றும் NFTE சங்கங்களின் அங்கீகார காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அங்கீகார காலம் நீட்டிக்கப் படவில்லை என்றால், ஊழியர்களின் பிரச்சினைகளை, நிர்வாகத்திடம் எடுத்துச் சொல்வதில் ஒரு வெற்றிடம் உருவாகும் என்றும், BSNL ஊழியர் சங்கம், CMD BSNLஇடம் தெரிவித்தது.
இந்தச் சூழ்நிலையில், BSNLEU மற்றும் NFTE சங்கங்களின் அங்கீகார காலத்தை, 16.01.2026, அல்லது, 10வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடும் வரை, இதில் எது முதலில் நடைபெறுகிறதோ, அது வரை, கார்ப்பரேட் அலுவலகம் நீட்டித்துள்ளது. அங்கீகார காலம் நீட்டிக்கப்பட்டதற்கு, CMD BSNL மற்றும் DIRECTOR (HR) ஆகியோருக்கு, BSNL ஊழியர் சங்கம், தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்
