ஊதிய மாற்ற குழு கூட்டம் இன்று (08.10.2025) நடைபெற்று, ஒப்பந்தம் கையெழுத்தானது. BSNLEU மற்றும் NFTE சங்கங்களின் பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்றனர்.
ஒப்பந்தத்தின் விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளது:-
1) இணைப்பில் உள்ள படி, ஊதிய விகிதங்கள்.
2) அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதற்கு இணையான ஊதிய நிர்ணய பலன், ஊழியர்களுக்கும் வழங்கப் படும்.
3) எந்த ஒரு ஊழியருக்கு ஏற்படும் ஊதிய நஷ்டத்தையும், எதிர்கால ஆண்டு ஊதிய உயர்வுகள் மூலம் ஈடுகட்டும் வகையில், PERSONAL PAY வழங்கி சரி செய்யப் படும்.
4) அலவன்ஸ்கள் மாற்றம், BSNL இயக்குனர் குழுவால் இறுதி செய்யப் பட்டு, ஊதிய உடன்பாடு கையெழுத்திடும் தேதியில் இருந்து அமலாக்கப்படும். (அலவன்ஸ்கள் மாற்றத்திற்காக, நிர்வாகம், ஏற்கனவே ஒரு குழுவை அமைத்துள்ளது)
5) வீட்டு வாடகைப்படி மாற்றம், BSNL இயக்குனர் குழு முடிவு செய்யும்.
6) ஊதிய முரண்பாடுகளும், குழப்பங்களும், பொருத்தமான முறையில் பரிசீலிக்கப்படும்.
7) இந்த ஊதிய மாற்றத்தில் அமலாக்கப் படும் ஊதிய விகிதங்கள், அடுத்த ஊதிய மாற்றத்திற்கு அடிப்படையாக இருக்காது.
தோழர் அனிமேஷ் மித்ரா, பொதுச் செயலாளர், BSNLEU



