தமிழ் மாநில தலைமை பொது மேலாளர், CGM., அவர்களின் அடாவடி, அராஜக போக்கை கண்டித்து, 06.10.2025 அன்று நாடு முழுவதும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் சார்பாக, மாநில, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த, AUAB மத்திய சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தது. அதன் அடிப்படையில், சேலம் மாவட்டத்தில், BSNLEU - SNEA - AIGETOA சங்கங்கள் சார்பாக, 06.10.2025 அன்று, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில், சக்திமிக்க ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
போராட்டத்திற்கு, தோழர்கள் R. ஸ்ரீனிவாசன் (BSNLEU), C. செந்தில்குமார் (SNEA), N. சுரேந்தர் (AIGETOA) கூட்டுத் தலைமை பொறுப்பை ஏற்றனர். போராட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து, AIGETOA மாவட்ட செயலர் தோழர் V. அன்பழகன் துவக்கவுரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து, SNEA மாவட்ட செயலர் தோழர் K. ஸ்ரீனிவாசன், SNEA CWC உறுப்பினர் தோழர் G. சேகர், AGM, தோழர் M. சண்முகம், COS., BSNLEU ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் S. ஹரிஹரன், நிறைவுறை வழங்கினார். தோழியர் S. நித்யா, SNEA மாவட்ட உதவி செயலர் அவர்கள் நன்றி கூறி போராட்டத்தை நிறைவு செய்தார். ஆர்ப்பாட்டத்தில், 80க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள் திரளாக பங்கேற்றனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.
































