புதுக்கோட்டை செக்யூரிட்டி சர்வீஸ் என்கிற ஒப்பந்தத்தாரிடம், கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த 11 ஒப்பந்த ஊழியர்களை எந்தவித காரணமும் சொல்லாமல், தன்னிச்சையாக, 01.10.2025 முதல் வேலையை விட்டு நிறுத்துவதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவு வெளியிட்டது. BSNL நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் நினைவு பரிசாக, நிர்வாகம் இந்த பாதக உத்தரவை வெளியிட்டது. உடனடியாக, நமது BSNLEU மாவட்ட சங்கம் பிரச்னையில் தலையிட்டு, நமது எதிர்ப்பை பதிவு செய்தோம். நிர்வாகத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களை புறக்கணித்தோம். பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தினோம். நமது தரப்பு நியாயத்தை விளக்கினோம். ஆனால் நிர்வாகத்தின் பிடிவாதம் நீடித்தது. எனவே, நமது மொழியில், தொழிலாளி வர்கத்தின் சித்தாந்த பின்னணியோடு, தள மட்ட போராட்டத்தை, CoC சார்பாக நடத்த முடிவு எடுத்து, அறைகூவல் கொடுத்தோம்.
அதன்படி, இன்று (10.10.2025), சேலம் GM அலுவலகத்தில், CoC சார்பாக, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு. தோழர்கள் M. சண்முகம், (BSNLEU), B. சுதாகரன் (AIBDPA), P. செல்வம் ( TNTCWU) கூட்டு தலைமை பொறுப்பை ஏற்றனர். போராட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து. தோழர் E. கோபால், மாநில உதவி செயலர், AIBDPA துவக்கவுரை வழங்கினார். தோழர்கள் M. செல்வம் மாவட்ட செயலர், TNTCWU, S. தமிழ்மணி, மாவட்ட செயலர், AIBDPA, ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். தோழர் S. ஹரிஹரன், மாவட்ட செயலர், BSNLEU நிறைவுரை வழங்கினார். தோழர் P. தங்கராஜு, மாவட்ட பொருளர், AIBDPA நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.
போராட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட, BSNLEU - AIBDPA - TNTCWU சங்க தோழர்கள் திரளாக பங்குபெற்றனர், மதியம் 1 மணிக்கு துவங்கிய போராட்டம், 2 மணிக்கு நிறைவுபெற்றது. விண்ணதிரும் கோஷங்கள், நிர்வாகத்தின் காதுகளுக்கு எட்டும் வகையில் இருந்தது. AIBDPA - TNTCWU தோழர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. சக்தி மிக்க போராட்டம் நடத்தியும், மாவட்ட நிர்வாகம், தனது நிலைப்பாட்டில், உறுதியாக இருக்கிறது. மாநில சங்கத்தின் கவனத்திற்கு மீண்டும் பிரச்சினையை கொண்டு சென்றுள்ளோம். பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவில்லை என்றால், நாமும் நமது போராட்டத்தை தீவரப்படுத்த ஆலோசித்துள்ளோம். மாநில சங்க வழிகாட்டுதல் கிடைத்தவுடன், அடுத்த கட்ட இயக்கம் சம்மந்தமாக, முடிவு செய்யப்படும். போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.































