நாள்: 06.10.2025, திங்கட்கிழமை
நேரம்: மதியம் 12 மணி அளவில்
இடம்: மெயின் தொலைபேசி நிலையம், சேலம்
தமிழ்நாடு மற்றும் சென்னை மாநிலங்களில், தொழிற்சங்க நடவடிக்கைகள் மீது தாக்குதல் தொடுக்கப்படுவதை எதிர்த்து, BSNLல் உள்ள, ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் இணைந்த எதிர்ப்பியக்கம், 06.10.2025 அன்று நடத்த நமது மத்திய சங்கங்கள் கூட்டாக முடிவு எடுத்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைபேசி மாநிலங்களில், ஊழியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததற்கும், தலைமை பொது மேலாளரை சந்திக்க வேண்டும் என்று கோரியதற்காகவும், CHARGE SHEET வழங்குவது மற்றும் தண்டிப்பது என தொழிற்சங்க நிர்வாகிகள் பழிவாங்கப் படுகின்றனர்.
அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களும் ஒன்றாக இணைந்து, மாநில மற்றும் கார்ப்பரேட் அலுவலக மட்டங்களில் இந்த பிரச்சனையை விவாதித்த பின்னரும் கூட, நிர்வாகம், இந்த பிரச்சனைக்கு அக்கறையுடன் தீர்வு காணவில்லை. இதற்கு தீர்வு எதுவும் கண்ணுக்குத் தெரியாத காரணத்தினால், 06.10.2025 அன்று நாடு தழுவிய அளவில் எதிர்ப்பியக்கம் நடத்த, நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. நமது ஒன்றுபட்ட கூட்டு இயக்கம் வாயிலாக, இந்த பிரச்சனக்கு தீர்வு காணும் வகையில், கார்ப்பரேட் நிர்வாகம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நாம் நம்புகிறோம்.
சேலம் மாவட்டத்தில், இந்த கூட்டு இயக்கம், BSNLEU - SNEA - AIGETOA சங்கங்கள் சார்பாக, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெற இருக்கிறது. மூன்று சங்க மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள், திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர், BSNLEU
K. ஸ்ரீனிவாசன்,
மாவட்ட செயலர், SNEA
V. அன்பழகன்,
மாவட்ட செயலர், AIGETOA
சேலம் மாவட்ட செயலர்கள்
போராட்ட பிரகடனம் காண இங்கே சொடுக்கவும்


