15.10.2025 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் P.அபிமன்யு ஆகியோர் CMD BSNLஐ சந்தித்து கீழ்கண்ட விஷயங்களை விவாதித்தனர்:-
1) ஊதிய மாற்றம்:-
ஊதிய மாற்ற ஒப்பந்தம், 08.10.2025 அன்று சுமூகமாக கையெழுத்தானதற்கு, தங்களின் மனமார்ந்த நன்றியை CMD BSNLக்கு, தலைவர்கள் தெரிவித்தனர். குறுகிய ஊதிய விகிதங்களில் மோசமான விளைவுகளை சரி செய்யவும், அதிகாரிகளுக்கு இணையான ஊதிய நிர்ணய பலனை உறுதி செய்ததற்கும், CMD BSNLன் சாதகமான உதவிகளை அங்கீகரித்தனர். ஊதிய ஒப்பந்தத்திற்கு DoTயின் ஒப்புதலை பெற விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, CMD BSNLஐ, தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இந்த பிரச்சனையின் மீது கார்ப்பரேட் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த CMD BSNL, DoTயின் ஒப்புதலை பெற அந்த கோப்பு விரைவில் எடுத்துச் செல்லப்படும் என உறுதி அளித்தார்.
2) 10வது உறுப்பினர் சரிபார்ப்பு நடத்துவது.
10வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடத்துவது தாமதமாகிறது என்பதை, CMD BSNL இடம் தலைவர்கள் தெரிவித்தனர். 10வது உறுப்பினர் சரிபார்ப்பை நடத்த, உடனடி நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என, அவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும், உறுப்பினர் சரிபார்ப்பு நடைபெறும் வரை, BSNLEU மற்றும் NFTE சங்கங்களின் அங்கீகார காலம் நீட்டிக்க வேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இல்லையெனில் ஊழியர்கள் பிரச்சனைகளை நிர்வாகத்திடம் விவாதிக்க, BSNLலில் வெற்றிடம் உருவாகும் என்றும் தெரிவித்தனர்.
இதனை பொறுமையாக கேட்ட CMD BSNL, தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
3) JEக்களின் ஊதிய விகிதம் மேம்படுத்துவது.
JE கேடரின் தேர்வு விதிகளை, DoT, அறிமுகப் படுத்தியுள்ளது என்று CMD BSNLஇடம் தெரிவித்த தலைவர்கள், அதில், JEக்களின் ஊதிய விகிதம் 35,400 -1,12,400 என வழங்கப் பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினர். இது தொடர்பாக, 17.07.2025 அன்று BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதி உள்ளது, அதில் BSNLலில் உள்ள JEக்களுக்கு 35,400 -1,12,400 ஊதியம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டினர். எந்த ஒரு கேடரின் ஊதிய உயர்வு விகிதத்தையும் மேம்படுத்துவதற்கு, ஊதிய மாற்ற குழுவிற்கு அதிகாரம் இல்லை என்றும், அதற்கான அதிகாரம், BSNL இயக்குனர் குழுவிற்கு மட்டுமே உள்ளது என்பதையும் தெரிவித்தனர். வலைத்தளங்களை பராமரிப்பதிலும், நிர்மானிப்பதிலும் JEக்களின் முக்கியமான பங்களிப்பை, CMD BSNLஇடம் விளக்கி, அவர்களுக்கு, 35,400 -1,12,400 எனும் ஊதிய விகிதம் வழங்குவதற்கான நியாயத்தை வலியுறுத்தினர். JEக்களுக்கு 35,400 -1,12,400 எனும் ஊதிய விகிதம் வழங்கப்படும் வகையில், JEக்களின் தேர்வு விதிகளை திருத்தம் செய்யும் வகையில், BSNL நிர்வாகம் விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இந்த வாதங்களை பொறுமையாக கேட்ட CMD BSNL, இந்த பிரச்சனையை அக்கறையுடன் கவனிப்பதாக உறுதி அளித்தார்.
4) பண்டிகை கால முன்பணம் வழங்குவது.
ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே, ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரி இருந்தது. அந்த சமயத்தில், 2025, மார்ச் மாதத்திற்கு பின், அதற்கான நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ளும் என, CMD BSNL உறுதி அளித்திருந்தார். மீண்டும், தீபாவளிக்கு, ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியது. இந்த கூட்டத்திலும், தீபாவளிக்கு பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும் என தலைவர்கள் உறுதியான கோரிக்கை வைத்தனர்.
இதற்கு சாதகமாக பதிலளித்த CMD BSNL, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
தோழர் அனிமேஷ் மித்ரா
