Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, October 21, 2025

தேசிய ஓய்வூதிய முறை - கருத்து கேட்பு


BSNL நிர்வாகம், 01.10.2000க்கு பிறகு, BSNLலில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு, தேசிய ஓய்வூதிய முறையை, National Pension System (NPS) அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்த, 25.08.2025 அன்று தொழிற்சங்கங்களிடம், கார்ப்பரேட் நிர்வாகம், இது சம்மந்தமாக விவாதித்தது. தற்போது உள்ள LIC நிறுவனத்துடனான, SUPERANNUATION PENSION FUND, SPF, திட்டத்தை மாற்ற முடிவு செய்துள்ளது கார்ப்பரேட் நிர்வாகம். புதிய திட்டத்தின் நன்மை தீமைகளை ஆராய கார்ப்பரேட் அலுவலகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. LIC மற்றும் HDFC ஓய்வூதிய மேலாண்மை லிமிடெட் நிறுவனத்திடமிருந்து, NPS முக்கிய அம்சம் குறித்த ஆவணங்களை, நிர்வாகம் பகிர்ந்து கொண்டுள்ளது. BSNLEU மத்திய சங்கம் நமது தோழர்களிடம் கருத்து கேட்டுள்ளது. 


நிர்வாக கடிதம் காண இங்கே சொடுக்கவும் 

HDFC ஆவணம் காண இங்கே சொடுக்கவும் 

LIC / HDFCஆவணம் காண இங்கே சொடுக்கவும்