BSNLCCWF மத்திய சம்மேளனத்தின் அறைகூவல் அடிப்படையில், ஒப்பந்த ஊழியர்களின் அடிப்படை வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (19.09.2025) நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி மாநில சங்கங்கள் சார்பாக, தமிழ் மாநில BSNL தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில், தர்ணா போராட்டம் சிறப்பாக நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் இருந்து தனி வாகனத்தில் 25 TNTCWU தோழர்கள், தர்ணா போராட்டத்தில், கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு சேலம் மாவட்ட BSNLEU சங்கம், தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.