ஊதிய பேச்சுவார்த்தை குழு கூட்டம், இன்று (17.09.2025) நடைபெற்றது. ஒரு சில நாட்களுக்கு முன் காலமான, NFTE சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினருமான, தோழர் இஸ்லாம் அகமது அவர்களின் மறைவிற்கு, இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. ஊதிய மாற்ற உடன்பாட்டை இன்றே (17.09.2025) இறுதி செய்திட ஊழியர் தரப்பு, கடுமையான முயற்சிகள் மேற்கொண்டன. அதன் விளைவாக, ஊழியர் தரப்பு மற்றும் நிர்வாக தரப்பு ஆகிய இரு சாராருக்கும் இடையே, கீழ்கண்ட முக்கியமான விஷயங்களில், ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
1) அதிகாரிகளுக்கு என்ன ஊதிய நிர்ணய பலன் வழங்கப் படுகிறதோ, அதுவே ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.
2) முன்னர் நடைபெற்ற கூட்டங்களில் தெரிவித்தபடி, 4 ஊதிய விகிதங்கள் மாற்றப்பட வேண்டும் என, ஊழியர் தரப்பு வலுவாக வாதிட்டது. ஆனால் நிர்வாக தரப்பு, அதனை ஏற்கவில்லை.
3) எனினும் மற்ற ஊதிய விகிதங்களோடு ஒப்பிடும்போது, NE-9 ஊதிய விகிதத்திற்கான மாற்றல் கணக்கீடு (CONVERSION FACTOR) குறைவாக இருப்பதால், NE-9 ஊதிய விகிதம் மாற்றப்படுவது தொடர்பாக, உயர்மட்ட நிர்வாகத்தோடு மீண்டும் விவாதிக்க, நிர்வாக தரப்பு ஏற்றுக் கொண்டது.
4) ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் தேதியில் இருந்து, அலவன்ஸ்கள் மாற்றம் செய்யப்படும். (அலவன்ஸ்கள் மாற்றுவதற்காக ஏற்கனவே ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளது).
5) ஊதிய தேக்கநிலை ஏற்படும் போது, கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்கிற, நம்முடைய கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஊதிய மாற்றத்தின் காரணமாக ஏற்படும் முரண்பாடுகள், குழப்பங்கள், ஊதிய குறைப்பு உள்ளிட்டவைகள், தகுந்த முறையில் கவனிக்கப்படும்.
6) ஊதிய மாற்றத்தின் போது அமலாக்கப்படும், குறைவான கால இடைவெளி கொண்ட இந்த ஊதிய விகிதங்கள், அடுத்த ஊதிய மாற்றத்திற்கான அடிப்படையாக இருக்கக் கூடாது என, இந்த குழு கருதுகிறது.
7) ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் அடுத்த கூட்டம், உத்தேசமாக 26.09.2025 அன்று என, நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அன்று, ஊதிய மாற்ற ஒப்பந்தம் கையெழுத்திடப் படலாம்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்