புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட BSNL ஊழியர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் DIRECTOR (HR) மரு கல்யாண் சாகர் நிப்பானி ஆகியோருக்கு இடையேயான ஒரு அறிமுக கூட்டம் 02.09.2025 அன்று நடைபெற்றது.
தலைவர் தோழர் M.விஜயகுமார், பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா, துணைத் தலைவர் தோழர் P.அபிமன்யு, துணைப் பொதுச் செயலாளர் தோழர் கணேஷ் ஹிங்கே மற்றும் பொருளாளர் தோழர் இர்ஃபான் பாஷா ஆகியோர் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர். திருமிகு அனிதா ஜோஹரி PGM (SR) அவர்களும் அந்த கூட்டத்தில் உடன் இருந்தார்.
கடந்த முறை பொதுச் செயலாளராக இருந்து, தற்போது துணைத் தலைவராக உள்ள தோழர் P.அபிமன்யு, தோழர்களை DIRECTOR (HR) இடம் அறிமுகப் படுத்தினார். புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த DIRECTOR (HR), புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட BSNL ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு, நிர்வாகத்தின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினார்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்