AUAB தலைமையிலான தொழிற்சங்கங்கள் மற்றும் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியபடி, BSNLன் ஓய்வூதிய பங்களிப்பை செலுத்துவது குறித்து அரசாங்கம் வரவேற்கத்தக்க முடிவை எடுத்துள்ளது. அதாவது, ஓய்வூதிய பங்களிப்பு, ஊழியர்களின் அதிகபட்ச ஊதியத்தின் அடிப்படையில் அல்லாமல், அவர்களின் உண்மையான அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் மட்டுமே வசூலிக்க வேண்டும் என இப்போது உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. 01.09.2025 முதல் இந்த உத்தரவு அமுலுக்கு வரும்
இது AUAB-யின் நீண்டகால கோரிக்கையாகும். இந்தப் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி AUAB பல போராட்டங்களை நடத்தியது. இந்தக் கோரிக்கையை நிதி அமைச்சகம் தொடர்ந்து நிராகரித்து வந்தது. தற்போது சாதக உத்தரவு வந்துள்ளது. வரவேற்கத்தக்க இந்த முடிவின் மூலம், BSNLன் நிதிச் சுமை நிச்சயமாக குறையும்.