ஊதிய மாற்ற பேச்சுவார்த்தையில், தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக விவாதிக்க, BSNL ஊழியர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு கூட்டம், 16.09.2025 அன்று நடைபெறும். ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை மற்றும் அதில் நிர்வாகத்தின் நிலைபாடு ஆகியவற்றை, மத்திய செயற்குழு உறுப்பினர்களுடன் விவாதிப்பது என்று அகில இந்திய மைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் அடுத்த கூட்டம், 17.09.2025 அன்று நடைபெறும் என நிர்வாகம், ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே, இந்த பிரச்சனையின் மீது நாம் ஒரு முடிவெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதால், மத்திய செயற்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்