ஊதிய மாற்ற பேச்சு வார்த்தையின் போது, NE ஊழியர்களுக்கு மட்டும் மிகக் குறுகிய ஊதிய விகிதங்களை நிர்வாகம் முன்மொழிந்தது. நீண்ட ஊதிய விகிதங்கள் வழங்கினால், ஓய்வூதிய பங்களிப்புக்கான செலவு அதிகரிக்கும் என்பது அவர்களின் வாதம். அதன் அடிப்படையில், ஜூலை 2018 இல் நடைபெற்ற ஊதிய திருத்தக் குழுவில் புதிய ஊதிய விகிதங்கள் குறித்து எட்டப்பட்ட ஒருமித்த கருத்துகளிலிருந்து நிர்வாகம் பின்வாங்கியது.
தற்போது இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்ச ஊதிய விகிதங்களில் அல்லாமல், உண்மையான அடிப்படை ஊதியத்தில் கணக்கிடப்பட்ட ஓய்வூதிய பங்களிப்பை வசூலிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. NE ஊழியர்களுக்கு நீண்ட ஊதிய விகிதங்களை அமுல்படுத்தினால், ஓய்வூதிய பங்களிப்பு காரணமாக செலவு அதிகரிக்காது. ஓய்வூதிய பங்களிப்பு இனி ஒரு பிரச்சனையல்ல.
இந்த பின்னணியில், BSNL ஊழியர் சங்கம், இன்று (12.09.2025) CMD BSNL க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. ஜூலை 2018ல் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கும், நிர்வாகத் தரப்புக்கும் இடையிலான ஒருமித்த கருத்து மூலம், இறுதி செய்யப்பட்ட ஊதிய விகிதங்களை அமுல்படுத்த, வலியுறுத்தியுள்ளோம்.