புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள, மொபைல் ஆப் மூலம் வருகையை பதிவு செய்யும் முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என, ஊழியர்களிடம் தேவையற்ற நிர்பந்தத்தை நிர்வாகம் ஏற்படுத்துகிறது. ஒரு சில மாநிலங்களில், தள மட்ட நிர்வாகங்கள், இந்த பிரச்சனையில் உத்தரவுகள் வெளியிடுவதன் மூலம், ஊழியர்களுக்கு தேவையற்ற நிர்பந்தத்தை கொடுக்கின்றனர். மாநில சங்கங்கள், தலைமை பொது மேலாளர்களிடம், தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சனையில், மத்திய சங்கமும் எதிர்ப்பு தெரிவித்து, DIRECTOR (HR)க்கு 28.07.2025 அன்று கடிதம் கொடுத்து விட்டது. 29.07.2025 அன்று அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகள், DIRECTOR (HR)இடம் நடைபெற்ற சந்திப்பின் போதும், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா, நமது சங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தினார். அந்தக் கூட்டத்தில், இந்த புதிய முறை, ஊழியர்களுக்கு கட்டாயம் இல்லை என DIRECTOR (HR) உறுதி அளித்தார்.
கடந்த தேசிய கவுன்சில் கூட்டத்திலும், DIRECTOR (HR) இடம் நடைபெற்ற அதிகாரபூர்வ சந்திப்பின் போதும், ஊழியர்களுக்கும் மொபைல் தொலைபேசி வழங்க வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம் கோரிக்கையை எழுப்பியது. ஆனால், BSNLன் நிதி நிலை சுட்டிக்காட்டி, அந்த கோரிக்கையை நிர்வாகம் மறுத்து விட்டது.ஊழியர்களுக்கு மொபைல் தொலைபேசி வழங்காமல், மொபைல் ஆப் மூலம் வருகையை பதிவு செய்ய வேண்டும் என, ஊழியர்களுக்கு எந்த ஒரு நெருக்கடியையும் நிர்வாகம் உருவாக்கக் கூடாது. அது நியாயமும் அல்ல.
