Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, September 11, 2025

தள மட்ட கவுன்சில் கூட்ட முடிவுகள்!


சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, 10.09.2025 அன்று சேலம் மாவட்ட தள மட்ட கவுன்சில், Local Council கூட்டம், கூட்டப்பட்டது. கூட்டத்திற்கு, மாவட்ட பொது மேலாளர் திரு ரவீந்திர பிரசாத், ITS.,  தலைமை தாங்கினார். GM அவர்களுடன், கீழ்கண்ட அதிகாரிகள், கூட்டத்தில் OFFICIAL SIDE உறுப்பினர்களாக கலந்து கொண்டனர் 

Joint GM

DGM HQ

DGM F

AGM HR/ADMN

AGM NWP

AGM INFRA / BTS

கூடுதலாக, 

SDE STAFF 

SDE MIS

JTO STAFF கலந்து கொண்டனர் 

ஊழியர் தரப்பில் BSNLEU 8 உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தோழர்கள் 

S. ஹரிஹரன் 

E. கோபால் 

R. ரமேஷ் 

M. கோபாலன் 

K. ராஜன் 

K. சண்முகசுந்தரம் 

R. லோகநாதன் 

B. வீரேஷ்குமார் 

மாவட்ட தலைவர் தோழர் R. ஸ்ரீனிவாசன் பார்வையாளராக கலந்து கொண்டார்.

DGM HQ அவர்கள் அலுவலர் தரப்பில் வரவேற்புரை வழங்கினார். அலுவலர் தரப்பு, ஊழியர் தரப்பு உறுப்பினர்கள், சுய அறிமுகத்திற்கு, பின் பொது மேலாளர் தலைமையுரை வழங்கினார். 

அதனை தொடர்ந்து ஊழியர் தரப்பு செயலர் தோழர் S. ஹரிஹரன் அனைவரையும் வரவேற்றார். சேலம் மாவட்ட தள மட்ட கவுன்சில் வரலாறு, தள மட்ட கவுன்சிலுக்கு உள்ள சட்ட பூர்வ அங்கீகாரம், ஊழியர் தரப்பு, நிர்வாக தரப்பு உறவுகள், BSNL நிறுவனத்தின் இன்றைய தேவை, ஊழியர் தரப்பு கோரிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களை சுட்டிக்காட்டி, வரவேற்புரை வழங்கினார்.

பின்னர் கூட்டத்தின் ஆய்படு பொருள் ஒவ்வொன்றாக விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆய்படு பொருள் மீதான விவாதங்களும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும் சுருக்கமாக கீழே வழங்கப்பட்டுள்ளது.   

9/1 வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு SWIPING MACHINE மற்றும் QR CODE வசதி ஏற்படுத்தி தர சாத்திய கூறுகள் ஆராயப்படும்.

9/2 ONLINE இல் செய்ய செய்யப்படும் FTTH PAYMENTS உடனுக்குடன் கணக்கிடு செய்யப்பட்டு, வாடிக்கையாளருக்கு RECONNECTION உடனுக்குடன்  வழங்கப்படும். 

9/3 பல்வேறு சேவைகளை ஒரே தாளாரத்தில், SINGLE WINDOW SYSTEM கிடைக்க ஏற்பாடு செய்யும் வகையில், GM அலுவலகத்தில் COMMERCIAL OFFICER வேண்டும் என கோரியிருந்தோம்.  தற்போது அங்கு OUTSOURCE முறையில், ஒரு வாடிக்கையாளர் சேவை மையம் துவங்க மாநில நிர்வாக ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்படும்.  

9/4 ஊழியர் தரப்பு பிரச்சினைகளை கேட்பதற்கும், ஓய்வுதியர்கள் பிரச்சனைகளை கேட்பதற்கும், GM அலுவலகத்தில், SDE STAFF, WELFARE OFFICER ஆக செயல்படுவார். 

9/5 GM அலுவலகம், மெய்யனூர், செவ்வாய்பேட்டை தொலைபேசி நிலையங்களில் லிப்ட் சரி செய்யப்பட்டு விட்டது. 

9/6 NWOP, நிர்வாகப் பிரிவு மற்றும் கணக்கு பிரிவுக்கு புதிய ஜெராக்ஸ் மெஷின்,  வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தோம். மாநில அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் வழங்க மறுத்து, SCANNER வசதியுடன் கூடிய இரண்டு PRINTER வழங்கியுள்ளார்கள் என நிர்வாகம் பதில் அளித்தது. நாம் அதை ஏற்றோம். கூடுதலாக, நமது ஊழியர்கள் XEROX எடுக்க வெளியில் அனுப்ப கூடாது என நாம் கோரினோம். நிர்வாகம் ஏற்று கொண்டது. 

9/7 ஓய்வு பெறும் ஊழியர் ஒரே முறை ஓய்வூதிய படிவங்களை, PENSION PAPERS  வழங்கும் வகையில்  மாற்றி அமைக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டது. கூடுதலாக, பணி நிறைவு பெற ஆறு மாதம் உள்ள நிலையில் ஊழியர் தாமாகவே கூட படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது. 

9/8  ஓய்வூதிய படிவங்கள், PENSION PAPERS அனுப்புவதில் ஏற்படும் அதீத காலதாமதத்தை, கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் பதில் அளித்தது. 

9/9 முன்பு நடைமுறையில் இருந்த, மாதத்தின் நடுவில் வழங்கப்படும், SUPPLEMENTARY BILL வாயிலான பட்டுவாடாவை மீண்டும் துவக்க வேண்டும் என கோரியிருந்தோம். கார்ப்பரேட் அலுவலகத்தில் அந்த நடைமுறையை நிறுத்தி விட்டதாக நிர்வாகம் பதில் அளித்தது. 

9/10 கணினிகள் தரம் உயர்த்தப்படும். தேவை ஏற்படும் இடங்களுக்கு, NEW COMPUTER, ACCESSORIES உபகரணங்கள் வழங்கப்படும். வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

9/11 GM அலுவலகத்தில் லிப்ட் சரி செய்யப்பட்டதால், MEDICAL SECTION இடமாற்றம் தேவையற்றதாகிவிட்டது.  

9/12 ஊழியர்களுக்கு BSNLMRS அடையாள அட்டை, புதியதாக வழங்கப்படும். 

9/13 ஊழியர்களின் சேவை பதிவேடுகளை, புதியதாக BINDING செய்யப்படும். ஊழியர்கள் தங்கள் பணி பதிவேட்டை நேரில் வந்து பார்த்து திருத்தங்கள் இருப்பின் தெரிவிக்கலாம். QUINQUENNIAL ATTESTATION செய்யப்படும் .

9/14 OCSC - தனியாரிடம் குத்தகைக்கு விடப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையங்களில் இருந்து பெறப்பட்ட வாடகை, மின்சார கட்டணம்  போன்றவற்றின் JAN 2023 TO DEC 2023 காலத்திற்கான விவரங்கள் பகிரப்பட்டது. 

9/15 காப்பர் இணைப்பகங்கள் மூடப்பட்டதால், உபயோகமற்ற பொருட்களை SCRAPPING முறையில் விற்பனை செய்யப்பட்டு, பெறப்பட்ட வருவாய் விவரங்கள் பகிரப்பட்டது. 

9/16 பைபர் இணைப்புகள் வழங்கும் நமது FRANCHISEE காலதாமதமாக பழுதை சரி செய்தால், அவருக்கு விதிக்கப்பட்ட PENALTY நடைமுறை விளக்கப்பட்டது விவரங்கள் பகிரப்பட்டது. 

9/17 தொலைபேசி நிலையங்களில் உள்ள பழைய பொருட்களை, SCRAPPING முறையில், விற்று பணமாக்கப்பட்ட விவரங்கள் வழங்கப்பட்டது. 

9/18 BSNLMRS திட்டத்தில் முன்னணி மருத்துவமனைகளோடு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்ய மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 

9/19 SALEM MAIN தொலைபேசி நிலையத்தில், ஒரு கூட்ட அரங்கம் அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்  

9/20 மூடப்பட்ட காப்பர் இணைப்பகங்களில், இருந்த பில்லர்கள் மற்றும் கேபிள்கள் பணமாக்கப்பட்ட விவரங்கள் வழங்கப்பட்டது. 

9/21 GM அலுவலகம், செவ்வை மற்றும் ஆத்தூர் தொலைபேசி நிலையத்தில் உள்ள கழிவறைகள் புதுப்பிக்கப்படும். கூடுதலாக, பெண் ஊழியர்கள் பணிபுரியும் இடங்களில், ப்ரெத்யேகமாக அவர்கள் உபயோகத்திற்கு என  வகைபடுத்தப்படும்.

OUT OF AGENDA என்கிற முறையில் கீழ்கண்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. 

1. சேம நல வாரிய பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் HONORORIUM நிறுத்தப்படாது. மாறாக, அடுத்த சேம நல வாரிய கமிட்டி கூட்டத்தில் அது ஆய்வுக்குட்படுத்தப்படும்.

2. ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தால், HOUSE KEEPING சம்மந்தமாக போடப்பட்ட உத்தரவை, முறையாக அமுல்படுத்த மீண்டும் தள மட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்படும். 

3. சேலம் மெயின் CSCல் உள்ள பணம் எண்ணும் கருவி பழுது நீக்கப்படும். கூடுதலாக, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் PMS ரசீதில் (GROUP BILL) உள்ள பிழைகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

4. சேம நல வாரிய கமிட்டி கூட்டம், இந்த மாத இறுதிக்குள் கூட்டப்படும். 

கூட்டம் சுமுகமாக நடைபெற்றது. ஊழியர் தரப்பு தோழர்கள், தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கினார்கள். நிர்வாகமும், ஆக்கபூர்வமாக பதில் வழங்கினார்கள். கூடுதலாக, BSNL நிறுவனத்தின் இன்றைய பிரச்சனைகள் சம்மந்தமாக நாம் எழுப்பிய சந்தேகங்களுக்கு பொறுமையாக, GM பதில் அளித்து, நாம் (BSNL) மீண்டு வருவோம் என நம்பிக்கை தெரிவித்தார். 4G / 5G சேவைகள் சிறப்பாக வழங்க உள்ளத்தையும், நமது நிறுவனத்தின் எதிர்காலத்தையும், புள்ளி விவரங்களோடு விவரித்தார். அலுவலர் தரப்பு செயலர், நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்