Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, September 25, 2025

24.09.2025 - மாவட்ட செயற்குழு முடிவுகள்!



BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின், செயற்குழு கூட்டம், 24.09.2025 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில், சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் R.  ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர், தலைமை தாங்கினார். தோழர் D. பிரசாத், மாவட்ட அமைப்பு செயலர் அஞ்சலியுறை நிகழ்த்த, மெயின் கிளை செயலர் தோழர் C. மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். 

ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், BSNLEU தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் M. சண்முகம் செயற்குழுவை, முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, மாவட்ட செயலர் தோழர் S. ஹரிஹரன், விளக்கவுரை வழங்கினார். 

அதனை தொடர்ந்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விவாதத்தில் பங்குபெற்றனர். AIBDPA சேலம் மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜு TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் வாழ்த்துரை வழங்கியபின், AIBDPA தமிழ் மாநில உதவி செயலர் தோழர் E. கோபால், சிறப்பான கருத்துரை வழங்கினார். BSNLWWCC சேலம் மாவட்ட கன்வீனர், இணை கன்வீனர், கூட்டத்தில் கலந்து கொண்டது சிறப்பம்சம். 

விவாதத்தில் வந்த கருத்துக்களுக்கு, மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கியபின், கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது. 

1. 11வது BSNLEU அகில இந்திய மாநாட்டிற்கு, பெருமளவு நிதி திரட்டி தந்த சேலம் மாவட்ட AIBDPA சங்கத்திற்கு, நன்றி தெரிவிக்கப்பட்டது.

2. அதே போல் எதிர்வரும் AIBDPA 5வது அகில இந்திய மாநாட்டிற்கு, சேலம் மாவட்ட BSNLEU சங்கம் தன் சக்திக்கு உட்பட்ட அளவில் நிதி திரட்டி வழங்குவது.

3. மாவட்ட மைய மேற்பார்வையில், GM அலுவலக கிளை கூட்டத்தை விரைந்து கூட்டுவது. புதிய உறுப்பினர்களை வரவேற்பது.

4. 09.07.2025 வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது 

5. சேவை குறைபாடுகள், SCRAPPING முறையில் பழைய பொருட்களை விற்று பணமாக்குதல், வாடகை கட்டிடங்களில் இயங்கி தற்போது மூடப்பட்ட காப்பர்  இணைப்பகங்களை காலி செய்வது உள்ளிட்ட விஷயங்களை விளக்கி, மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுப்பது, பேட்டி காண்பது. 

6. 10வது சரிபார்ப்பு தேர்தலில், சேலம் மாவட்டத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் BSNLEU வெற்றி பெறுவதற்கு, கிளை சங்கங்கள், உடனடியாக தேர்தல் பணிகளை துவக்குவது.

7. TNTCWU மாநில சங்க வழிகாட்டுதல் அடிப்படையில், மீண்டும் SAMADHAN PORTALலில் வழக்கு தொடர்வது. புதிய ஒப்பந்ததாரர் பொறுப்பேற்றவுடன், வேலை இழந்த தொழிலாளர்களுக்கு, மீண்டும் வேலை கிடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது. 

05.02.2025 அன்று நடைபெற்ற, 11வது மாவட்ட மாநாட்டிற்கு பிந்தைய வரவு செலவு பரிவர்தனைகள் சம்மந்தமான தகவல்கள், நிதி நிலை பரிசீலனையில்  சமர்ப்பிக்கப்பட்டது. 2025 ஜனவரி முதல் 2025 ஜூன் வரையிலான கிளை சங்கங்களுக்கான கோட்டா வழங்கப்பட்டது. 

மாவட்ட பொருளர் தோழர் R. ரமேஷ் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். கொடிகள் தோரணங்கள் கட்டி, கூட்டம் நடைபெறும் இடத்தை அழகு படுத்திய TNTCWU தோழர்களுக்கு, நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதே போல், சுவையான உணவை, நியாயமான விலையில், குறித்த நேரத்தில், வழங்கிய தோழர் K. லோகநாதன், செவ்வை கிளை, அவர்களுக்கும் நமது நன்றியை உரித்தாக்குகிறோம்.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்