Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, September 26, 2025

ஊதிய மாற்ற ஒப்பந்தம், 08.10.2025 அன்று கையெழுத்திடப்படும்.


ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம் இன்று (26.09.2025) நடைபெற்றது.  BSNLEU மற்றும் NFTE சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவரும், இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஊதிய மாற்ற ஒப்பந்தத்தின் நகல், ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் தரப்பட்டது.  நகல் ஒப்பந்தத்தின் மீது விவாதங்கள் நடைபெற்று, திருத்தங்கள் செய்யப்பட்டன.  

சில தவிர்க்க இயலாத காரணங்களால், ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப் படவில்லை.  குறிப்பாக, 17.09.2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில், NE-9 ஊதிய விகிதத்தின், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அளவுகளை, உயர்த்த வேண்டும் என்பது தொடர்பாக, சங்கங்கள் கடுமையாக வாதிட்டன.  இந்தப் பிரச்சினையை, உயர்மட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு கொண்டு செல்ல, நிர்வாக தரப்பு ஏற்றுக் கொண்டது.  ஆனால், இந்த முன்மொழிவை, உயர்மட்ட நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை என, இன்றைய கூட்டத்தில் நிர்வாக தரப்பு தெரிவித்தது.

நீண்ட விவாதங்களுக்கு பின், SNATTA பொதுச் செயலாளர் தோழர் சுரேஷ்குமார் அவர்களின் உறுதியான வேண்டுகோளின் அடிப்படையில், NE-9 ஊதிய விகிதம் தொடர்பாக விவாதிக்க, CMD BSNLஐ உடனடியாக சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் அடுத்த கூட்டம், 08.10.2025 அன்று நடைபெறும். அன்று ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். 

தோழமையுடன் 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்