ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம் இன்று (01.09.2025) நடைபெற்றது. BSNLEU மற்றும் NFTE BSNL சங்கங்களை சார்ந்த அனைத்து உறுப்பினர்களும், இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். ஊதிய விகிதங்கள் மற்றும் ஊதிய நிர்ணய பலன் ஆகியவை தொடர்பான நீடித்த விவாதங்கள் நடைபெற்றன. விவாதங்கள் நிறைவு பெறாத காரணத்தால், நாளை மறுநாள், 03.09.2025 அன்று காலை 11:00 மணிக்கு தொடரும்.