Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, August 29, 2025

ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம், 01.09.2025 அன்று நடைபெறும்.


அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் தொடர் வலியுறுத்தலுக்கு பின், 01.09.2025 அன்று மாலை 3 மணிக்கு, ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம் நடைபெறும் என, நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை, இன்று (29.08.2025) கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 

கடந்த ஊதிய பேச்சு வார்த்தை குழுவின் கூட்டம் 30.06.2025 அன்று நடைபெற்றது. அதன் பதிவுகளை, கார்ப்பரேட் அலுவலகத்தின் SR பிரிவு, இன்று (29.08.2025) வெளியிட்டுள்ளது. 

கோவையில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில், தோழர் M. விஜயகுமார் அகில இந்திய தலைவராக தேர்வு பெற்றதை தொடர்ந்து,  முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஜான் வர்கீஸ் அவர்களுக்கு பதிலாக, தோழர் M.விஜயகுமார் அவர்களை, ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவில் இணைப்பது என அகில இந்திய மையக் கூட்டம் முடிவு செய்தது. இதற்கான கடிதத்தை, BSNL ஊழியர் சங்கம், நிர்வாகத்திற்கு ஏற்கனவே கொடுத்திருந்தது.  அதனை ஏற்று, கார்ப்பரேட் அலுவலகம் இன்று (29.08.2025), தோழர் M. விஜயகுமார் அவர்களை ஊதிய பேச்சுவார்த்தை குழுவில் இணைத்து, உத்தரவு வெளியிட்டுள்ளது.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 

30.06.2025 கூட்ட முடிவுகள் காண இங்கே சொடுக்கவும் 

தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்