BSNL தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி மாநில தலைமை பொது மேலாளர், அவர்களின் தொழிற்சங்க விரோத போக்கு, நிறுவன வருவாய் மற்றும் சேவை மேம்பாடு குறித்த மெத்தனப்போக்கு உள்ளிட்ட விஷயங்களை எதிர்த்து, 17.07.2025 அன்று மாவட்ட தலைநகரங்களில், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடத்தினோம். அடுத்த கட்ட போராட்டமாக, 06.08.2025 அன்று காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். மத்திய சங்கங்களின் தலையீடு காரணமாக, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தோம்.
இருப்பினும், பிரச்னையில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால், அடுத்த கட்ட நடவடிக்கை சம்மந்தமாக விவாதிக்க, 09.08.2025 அன்று Unions and Associations சார்பாக, தோழர் K. நடராஜன் அவர்கள் தலைமையில், சென்னை கிரீம்ஸ் ரோடு, NFTEBSNL சங்க அலுவலகத்தில், ஒரு கூட்டம் நடைபெற்றது. கடந்த 06.08.2025 நாம் நடத்த இருந்த, ஒத்திவைக்கப்பட்ட போராட்டம் குறித்த விவரங்களை விளக்கி BSNLEU AGS தோழர் S. செல்லப்பா அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து, BSNLEU, NFTEBSNL, SNEA, AIGETOA, SEWABSNL, TEPU இரு மாநில சங்க தலைவர்கள், பிரதிநிதிகள் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். AIBDPA மாநிலச் செயலாளர் தோழர் R. ராஜசேகர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக, தோழர் S. செல்லப்பா தொகுப்புரை வழங்கினார்.
அதன்பின் கீழ்க்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
1. 19.08.2025 அன்று காத்திருப்பு போராட்டம் நடத்துவது. மாநிலம் முழுவதிலுமிருந்து. அனைத்து அமைப்புகள் சார்பாகவும் தோழர்களை திரட்டுவது, போராட்டத்தை வலுவாக நடத்துவது.
2. தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகங்களில், பிளக்ஸ் போர்டு வைப்பது.
3. கோரிக்கைகளை விளக்கி, நோட்டீஸ் வெளியிடுவது.
4. 200 போஸ்டர் தயார் செய்து, அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைப்பது.
5. மீடியாக்களை வரவழைத்து, நிர்வாகத்தின் மோசமான அணுகுமுறை குறித்து, விரிவாக செய்திகளை கொடுப்பது.
6. போராட்டத்திற்கான செலவுகளை சமாளிப்பதற்கு, ஒவ்வொரு அமைப்பும் ரூ3000 நிதி வழங்குவது.
7. இரு தினங்களுக்கு உள்ளாக, அனைத்து அமைப்புகளும், சென்னை தொலைபேசி SNEA மாநில தலைவர், தோழர் பூபாலன் அவர்களுக்கு தொகையை அனுப்பி விடுவது.
8. நமது போராட்டம் குறித்த அறிவிப்பை அனைத்து மாநில செயலாளர்களிடமும் கையெழுத்து பெற்று, வருகிற 11.08.2025 திங்கட்கிழமை, அன்று நிர்வாகத்திற்கு வழங்குவது.
9. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் Official WhatsApp Groupலிருந்து வெளியேறி, நமது ஒத்துழையாமையை வெளிப்படுத்துவது.
போராட்டத்தை வெற்றிகரமாக ஆக்கிடுவோம். தொழிற்சங்கங்களை அலட்சியப்படுத்தும் நிர்வாகத்தின் ஆணவப் போக்கை தகர்த்தெறிவோம்.
தோழமையுடன்,
