வருகின்ற 2025 ஆகஸ்ட் 9 முதல் 11 வரை, சேலம் வரலட்சுமி திருமண மண்டபத்தில், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க, SZIEF 36வது பொது மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு பேரணி 09.08.2025 அன்று காலை 9.00 மணியளவில் 5 ரோடு கோகுலம் மருத்துவமனை முன்பிருந்து துவங்கி மண்டபத்திற்கு வருகிறது. மாநாட்டு பேரணிக்கு வரவேற்ப்பு கொடுக்க, 3 ரோடு, நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை அருகில், சேலம் மாவட்ட CoC சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள் முன்னணி தோழர்கள் வரவேற்பு நிகழ்வில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். காலை சிற்றுண்டி, மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












