08.08.2025 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா, PGM (ESTT), திரு S.P. சிங் அவர்களை சந்தித்து, நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் கீழ்கண்ட பிரச்சனைகளுக்கு, விரைவில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.
மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பதவி உயர்வு:-
மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில், கார்ப்பரேட் அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை, PGM (ESTT)ன் பார்வைக்கு, பொதுச் செயலாளர் கொண்டு வந்தார். ஆனால், தொழிற்சங்கத்தின் புரிதலுக்கு மாறாக, நிர்வாகம் விளக்கம் அளித்தது. நீண்ட விவாதத்திற்கு பின், ஒரு இறுதி முடிவுக்கு வர, DGM(ADMN) கலந்து கொள்ளக்கூடிய ஒரு கூட்டத்தில், இந்த பிரச்சனை விவாதிக்கப்படும் என ஏற்றுக் கொள்ளப்பட்டது.
JTO பயிற்சி மையம் மாற்றம்:-
புதியதாக JTOவாக தேர்வு செய்யப்பட்ட JEக்களுக்கு, தென் மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, சுமார் 22 தோழர்களுக்கு, அசௌகரியம் ஏற்படுத்தக்கூடிய காசியாபாத் அல்லது ஜபல்பூருக்கு பயிற்சி அனுப்புவதாக தெரியவந்துள்ளது. அவர்களின் சிரமத்தை குறைக்க, பயிற்சி கேந்திரம் மாற்றப்பட வேண்டும் என பொதுச் செயலாளர் வலியுறுத்தினார். பயிற்சி கேந்திரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவாதித்து இந்த பிரச்சனை பரிசீலிக்கப்படும் என PGM (ESTT) உறுதி அளித்தார்.
கேஷுவல் ஊழியர்களுக்கு DA உத்தரவு:-
மத்திய அரசு ஊழியர்களுக்கு, 01.01.2025 முதல் DA மாற்றத்திற்கான உத்தரவினை, 2025, ஜூன் மாதத்தில் DoP&T வெளியிட்டது. இது, BSNLலில் உள்ள கேஷுவல் ஊழியர்களுக்கும் பொருந்தும். ஆனால், இதுவரை கார்ப்பரேட் அலுவலகம், அந்த உத்தரவை ENDORSE செய்யவில்லை. இந்த காலதாமதத்தின் மீது, தனது கடும் அதிர்ச்சியை தெரிவித்த பொதுச் செயலாளர், 2025, ஆகஸ்ட் மாத ஊதியத்தில், நிலுவைத் தொகையுடன், புதிய DA வழங்கப்படுவதற்கு தேவையான உத்தரவை, வெளியிட வேண்டுமென வலியுறுத்தினார். இதற்கான கோப்பு ஏற்கனவே, நிதி பிரிவின் ஒப்புதலை வேண்டி அனுப்பப் பட்டுள்ளதாக, PGM (ESTT) உறுதி செய்தார்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
