காசாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என, ஒரு சில நாட்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பட்டினியால் சாகும் பாலஸ்தீனியர்களுக்கு அனுப்பப்பட்டு வரும், உணவு மற்றும் நிவாரண பொருட்களை, இஸ்ரேல் திட்டமிட்டு தடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியது. காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை அழிக்க, இஸ்ரேல், பட்டினியை ஒரு வழியாக பயன்படுத்துகிறது. இதுவரை, இஸ்ரேலிய படைகள் 60,000 பாலஸ்தீனியர்களை கொன்றுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள், பெண்களும் குழந்தைகளும் ஆவார்கள். இஸ்ரேலிய படைகள் மனிதாபிமானமற்று, உணவுக்காக காத்திருக்க வைத்து, பாலஸ்தீனியர்களை கொண்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், பாலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு எதிராக, 2025, செப்டம்பர் 8ஆம் தேதி, எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, சர்வதேச தொழிற்சங்கங்களின் சம்மேளன(WFTU)த்தின் ஒரு அங்கமான, TRADE UNION INTERNATIONAL (TRANSPORTS, PORTS, FISHERIES AND COMMUNICATIONS), உலக தொழிலாளி வர்க்கத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.