தோழர் அனிமேஷ் மித்ரா, GS, 20.08.2025 அன்று, மனித வள இயக்குநர் டாக்டர் கல்யாண் சாகர் நிப்பானியைச் சந்தித்து, FESTIVAL ADVANCE, விழா முன்பணத்தை அனுமதிக்குமாறு மீண்டும் வலியுறுத்தினார். 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில், BSNL இன் வருவாய் மேம்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் 16.07.2025 அன்று நடைபெற்ற முறையான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஓணம், கணேஷ் சதுர்த்தி, துர்கா பூஜை மற்றும் தீபாவளி போன்ற விழா காலங்கள் நெருங்கி வருவதால், தாமதமின்றி முடிவு எடுக்குமாறு மனித வள இயக்குனரை நமது பொது செயலர் வலியுறுத்தினார்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய சங்க இணையதளம்