இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது, DoTயால் விளம்பரம் செய்யப்பட்டு, 01.10.2000க்கு முன்பு தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி போன்ற காரணங்களால், 01.10.2000க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள், DoT ஊழியர்களாக கருத வேண்டும் என்பது தான் அந்த தீர்ப்பு. இருப்பினும், நீதிமன்றத்தை அணுகிய அதிகாரிகளுக்கு மட்டுமே அந்த தீர்ப்பு செல்லும் என நியாயமற்ற நிலைப்பாட்டை, DoT எடுத்துள்ளது. நீதிமன்றத்தை அணுகாத, இதேபோன்ற நிலையில் உள்ள அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், இந்த வசதியை நீட்டிக்கக் கோரி BSNLEU அரசாங்கத்திற்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளது.
தற்போது, CAT, சண்டிகர் பெஞ்ச், பஞ்சாப் வட்டத்தைச் சேர்ந்த 253 ஊழியர்களுக்கு ஆதரவாக, 08.08.2025 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. 253 ஊழியர்களின் ஆட்சேர்ப்பு செயல்முறை, DoTயால் தொடங்கப்பட்டது, BSNL உருவாக்கப்பட்ட பின்னர் அவர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். 01.10.2000 க்குப் பிறகு பணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், DoT ஊழியர்களுக்கு இணையாக, GPF, பழைய ஓய்வூதியத் திட்டம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, LTC, விடுப்பு பணமாக்குதல், மருத்துவ வசதிகள் மற்றும் பதவி உயர்வு வழிகள் உள்ளிட்ட சலுகைகள் அனைத்து 253 ஊழியர்களுக்கும் நீட்டிக்குமாறு CAT, DoT-க்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஊழியர்களை DoT ஊழியர்களாக கருத வேண்டும் என இன்று (26.08.2025) மீண்டும் DoT செயலருக்கு, BSNLEU கடிதம் எழுதியுள்ளது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய சங்க இணையதளம்
CAT தீர்ப்பு காண இங்கே சொடுக்கவும்
