Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, August 7, 2025

ஊதிய மாற்ற பிரச்சனை - CMD BSNL உத்தரவு .


தமிழ்நாடு மாநில தலைமை பொது மேலாளரின், ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்க, BSNLல் உள்ள ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள், 06.08.2025 அன்று, CMD BSNL திரு A.ராபர்ட் J.ரவி அவர்களை சந்தித்தனர்.  DIRECTOR (HR), மரு.கல்யாண் சாகர் நிப்பானி அவர்களும் அந்த கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், ஊழியர்களின் ஊதிய மாற்ற பிரச்சனையும் முன்வைக்கப்பட்டது.  ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை, கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை அடைந்து விட்டதாகவும், ஆனால், ஒப்பந்தத்தை இறுதி படுத்த, அடுத்த கட்ட கூட்டங்கள் நடைபெறவில்லை என்றும் CMD BSNLஇடம் தெரிவிக்கப்பட்டது.  

ஊதிய மாற்ற ஒப்பந்தத்தை இறுதிப் படுத்த, தொழிற்சங்கங்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகள் தொடர்பாக, நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.  ஊதிய மாற்ற ஒப்பந்தத்தை விரைவில் தீர்வு காண, ஏற்பட்டுள்ள தேக்க நிலையை உடைக்க, CMD BSNLன் தலையீடு அவசியம் என்றும் கோரப்பட்டது. 

அதற்கு CMD BSNL, சாதகமாக செவிசாய்த்து, ஊதிய மாற்ற ஒப்பந்தத்தை இறுதிப் படுத்த, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, DIRECTOR (HR)க்கு, CMD BSNL உத்தரவு.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 


தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்