முக்கியமான சில பிரச்சினைகளை விவாதிப்பதற்காக, 06.08.2025 அன்று CMD BSNL அவர்களை ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் பொதுச் செயலாளர்கள், சந்தித்தனர். CMD BSNLலின் உடனடி தலையீடு தேவை என்பதை வலியுறுத்தி, இரண்டு முக்கியமான பிரச்சனைகள் முன்னிறுத்தப்பட்டன.
(1) தலைமை பொது மேலாளரின் செயல்பாடு காரணமாக, தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைபேசி மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலையினை, CMD BSNLக்கு தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர். இவை அனைத்தையும் கேட்டுக் கொண்ட CMD BSNL, இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என DIRECTOR (HR) அவர்களுக்கு வழிகாட்டினார்.
(2) ஊதிய மாற்ற பிரச்சனையின் மீது விவாதிக்கையில், கடந்த ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழு கூட்டம் 30.06.2025 அன்று நடைபெற்றது என்பதையும், அந்தக் கூட்டத்தில், ஒப்பந்தத்தில் கையெழுத்திட, தங்களது விருப்பத்தை அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் தெரிவித்ததையும், CMD BSNLயிடம் தெரிவிக்கப்பட்டது.
ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழு கூட்டத்தில், ஊதிய நிர்ணய பலன் மற்றும் ஊதிய தேக்கநிலை பிரச்சனையை தவிர்க்க, நான்கு ஊதிய விகிதங்களை உயர்நிலைப் படுத்துவது ஆகிய பிரச்சனைகளின் மீது, தங்களது கருத்துக்களை ஊழியர் தரப்பு தெரிவித்திருந்தது. ஆனால் அதற்குப்பின், துரதிஷ்டவசமாக, அதிகாரபூர்வ சந்திப்பு என்பது நடைபெறவில்லை என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு சாதகமாக பதில் அளித்த CMD BSNL, நிர்வாக தரப்புக்கும், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்திட, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள DIRECTOR (HR)க்கு உத்தரவிட்டார். மொபைல் ஆப் மூலம் வருகை பதிவு செய்வது உள்ளிட்ட பிரச்சனைகளின் மீது, ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களிடம், அர்த்த பூர்வமான விவாதங்களை நடத்தி, தீர்வு காண DIRECTOR (HR)இடம், CMD BSNL கேட்டுக் கொண்டார்.
பொதுச் செயலாளர்கள்
ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் ,BSNL
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
