தற்போதுள்ள SUPERANNUATION PENSION (SAP) திட்டத்திலிருந்து, தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு (NPS) மாறுவது என்று, BSNL நிர்வாகம் ஒரு முடிவு எடுத்துள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு (UPS) விருப்பம் தெரிவித்திருந்த அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இருந்து (UPS), தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு (NPS) ஒரு முறை மாறிக் கொள்ள, ஒரு அவகாசம் வழங்குவது என, ஒன்றிய அரசாங்கம், சமீபத்தில் முடிவெடுத்துள்ளது. அதேபோல BSNLலில் பணி அமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கும், SAP திட்டத்திலிருந்து NPS திட்டத்திற்கு மாற்றிக்கொள்வது என BSNL நிர்வாகமும் முடிவெடுத்துள்ளது. தற்போது அந்த ஊழியர்கள், SUPERANNUATION PENSION (SAP) திட்டத்தின் கீழ் உள்ளனர். அதன் அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே 25.08.2025 அன்று ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் BSNL ஊழியர் சங்கத்தின் சார்பாக பங்கு பெற்ற உதவி பொதுச் செயலாளர் தோழர் அஸ்வின் குமார், நமது சங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்திற்கு ஆயுள் காப்பீட்டு கழகத்திலிருந்து ஒரு பிரதிநிதி வரவழைக்கப்பட்டு, SAP திட்டத்திலிருந்து, NPS திட்டத்திற்கு மாறுவதன் மூலம் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை விளக்கி பேசினார். தற்போதுள்ள SAP திட்டத்தின் பாதுகாவலராக LIC நிறுவனம் உள்ளது. இருந்த போதும், BSNL நிர்வாகமும் , LIC அதிகாரியும், இந்த மாற்றத்தின் மூலம் ஏற்படக்கூடிய சாதகமான அம்சங்களையும் விளக்கிப் பேசினர். ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகள், தங்களது நிலைப்பாட்டை தெரிவித்ததோடு, இந்த மாற்றத்தின் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகளின் விவரங்களை தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டனர்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
