BSNLலில் 2வது VRS திட்டத்தை அமல்படுத்த, BSNL இயக்குனர் குழு ஏற்கனவே முடிவு எடுத்துள்ளது. BSNL இயக்குனர் குழுவின் இந்த முடிவு, ஏற்கனவே அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளது. BSNLலில் 2வது VRS திட்டம் அமலாக்கப்படுவது தொடர்பாக, நிர்வாகம், ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களிடம் எந்த விதமான தகவலும் தெரிவிக்கவில்லை. BSNLலில் 2வது VRS திட்டம் அமலாக்கப்படுவது தொடர்பாக, BSNL நிர்வாகத்திற்கும், DoTக்கும் இடையே, கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது. BSNLலில் 2வது VRS திட்டம் அமலாக்குவது என, BSNL இயக்குனர் குழு முடிவு செய்யப்பட்ட பின்னும், BSNLலில் 2வது VRS திட்டம் அமலாக்கப்பட மாட்டாது எனவும், ஊழியர்கள் அது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் CMD BSNL கூறி வருகிறார்.
எனினும், BSNLலில் 2வது VRS திட்டம் அமலாக்கப் படுவது தொடர்பாக, தற்போது கடுமையான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. BSNLலில் 2வது VRS திட்டம் அமலாக்கப்படுவது, BSNL மற்றும் அதன் ஊழியர்களின் நலன்களுக்காக அல்ல. BSNLலில் 2வது VRS திட்டம் அமலாக்கப்படுவதை கடுமையாக எதிர்த்து, BSNL ஊழியர் சங்கம், நிர்வாகத்திற்கும், அரசாங்கத்திற்கும் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளது. BSNLலில் உள்ள ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் ஒன்றாக இணைந்து, BSNLலில் 2வது VRS திட்டத்தை எதிர்த்து, போராட்ட இயக்கங்களை நடத்த வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் ஆழமாக கருதுகிறது. இந்த திசை வழியில், BSNL ஊழியர் சங்கம் முன் முயற்சி எடுக்கும்.
20.08.2025 அன்று மனித வள இயக்குனர் டாக்டர் கல்யாண் சாகர் நிப்பானி அவர்களை நேரில் சந்தித்து நமது பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா நமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
