நேற்று (09.08.2025) சேலத்தில், இன்சூரன்ஸ் ஊழியர்கள் 36வது பொது மாநாடு, சிறப்பாக துவங்கியது. முதல் நிகழ்வாக, மாநாட்டு பேரணி, சேலம் மெய்யனுர் தொலைபேசி நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு, மாநாட்டு அரங்கமான, ஸ்ரீ வரலக்ஷ்மி மஹால் திருமண மண்டபத்தை வந்தைடைந்தது. தென்மண்டல தலைவர் தோழர் பி.பி. கிருஷ்ணன் தலைமையில் பேரணி நடைபெற்றது. சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு டி.எம். செல்வகணபதி பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில், 500 க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர்.
BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க தோழர்களும் திரளாக, மூன்று ரோடு அருகில் பேரணிக்கு, விண்ணதிரும் கோஷங்களோடு, வரவேற்பு வழங்கினார்கள். வரவேற்பு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை தோழர்களுக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்களை CoC சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
கன்வீனர், CoC


















