நாள்: 12.08.2025 - செவ்வாய்க்கிழமை
நேரம்: மதியம் 12.00 மணி அளவில்
இடம்: GM அலுவலகம் சேலம்
ஒப்பந்தத் தொழிலாளர்களின், பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 12.08.2025 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் 19.09.2025 அன்று மாநில தலைநகரத்தில் தர்ணா என்ற இரண்டு கட்ட போராட்ட அறைகூவலை, BSNLCCWF, ஒப்பந்த ஊழியர் மத்திய கூட்டமைப்பு வழங்கியுள்ளது.
தமிழ் மாநில BSNLEU - TNTCWU சங்கங்கள் ஒருங்கிணைந்து போராட்ட களம் காண அறைகூவல் கொடுத்துள்ளது. நமது சேலம் மாவட்டத்தில், வழக்கம் போல் நாம் CoC சார்பாக இந்த இயக்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி, நாளை (12.08.2025) மதியம் 12 மணி அளவில், சேலம் பொது மேலாளர் அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றவுள்ளது. BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க தோழர்களும் தவறாமல் இயக்கத்தில் கலந்து கொள்ளவேண்டுமென தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
கோரிக்கைகள்
1. SLA முறையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யாதே.
2. நிலுவையில் உள்ள ஊதியங்களை உடனடியாக வழங்கிடு.
3. குறைந்தபட்ச ஊதியத்தை அமுல்படுத்து.
4. சமூக நல பாதுகாப்பு திட்டங்களான, EPF / ESI முறையாக அமுல்படுத்து.
5. 7வது CPC ஊதிய விகிதங்களின் அடிப்படையில், கேசுவல் ஊழியர்களின் ஊதியத்தை, திருத்தி அமைத்திடு.
