BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் அமலாக்கப்படாதது தொடர்பாக, பொதுத்துறை நிறுவனங்களுக்கான பாராளுமன்ற குழு, தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களுக்கான பாராளுமன்ற குழு, 12.08.2025 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தனது 15ஆவது அறிக்கையில், BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் அமலாக்கப்படாதது தொடர்பான, தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது. ஊதியம், அலவன்ஸ் மற்றும் ஓய்வூதிய பலன்கள் ஆகியவற்றில், BSNL ஊழியர்களுக்கும், அதில் உள்ள ITS அதிகாரிகளுக்கும், ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருப்பதை இந்த குழு சுட்டிக்காட்டி உள்ளது. 7வது ஊதிய குழு பரிந்துரைகள் அடிப்படையில், ITS அதிகாரிகளின் ஊதியம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும், அந்த குழு சுட்டிக்காட்டி உள்ளது. அதே சமயம், BSNL ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகள், அமலாக்கப்படவில்லை. "மத்திய அரசின் அளவீடுகளில் படி, ITS அதிகாரிகள், அதிகப்படியான அலவன்ஸ்களையும், வசதிகளையும் அனுபவித்துக் கொள்கின்றனர். ஆனால், நிறுவனத்தின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, BSNL ஊழியர்களின் பலன்கள், சுருக்கப்பட்டு விட்டன. எனினும், 2009-10 ஆம் நிதியாண்டு முதல், BSNL தொடர்ச்சியாக நஷ்டத்தில் செயல்பட்டு கொண்டிருப்பதால், ஊதியமாற்ற குழு பரிந்துரையின் படி, BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் பரிசீலிக்கப்படவில்லை என DoT, பொதுத்துறை நிறுவனங்களுக்கான பாராளுமன்ற குழுவின் கருத்துக்களுக்கு பதில் அளித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களுக்கான பாராளுமன்ற குழுவில் பாஜக, காங்கிரஸ், CPI(M) மற்றும் இதர கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட, அனைவரும் உள்ளனர். இவ்வாறாக, அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் அமலாக்கப்படாதது தொடர்பாக, தங்களுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளனர். இதுதான் நமது நாட்டின் ஜனநாயகத்தின் குரல். பொதுத்துறை நிறுவனங்களுக்கான பாராளுமன்ற குழுவின் அறிக்கையினை, மத்திய அரசாங்கம் சரியான பார்வையில் பரிசீலித்து, BSNL ஊழியர்களுக்கு, ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும்.