அதிகாரிகளும், ஊழியர்களும் மொபைல் ஆப் மூலம் வருகையை பதிவு செய்ய வேண்டும் என, கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. நிறுவனம், அதிகாரிகளுக்கு ஏற்கனவே ஸ்மார்ட் ஃபோன்களை வழங்கி உள்ளது. ஆனால், அது ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. கணிசமான ஊழியர்களிடம் ஸ்மார்ட் போன்கள் இல்லை. இந்த சூழ்நிலையில், ஊழியர்களையும் மொபைல் ஆப் மூலம் வருகை பதிவு செய்ய சொல்வது அவர்களை துன்புறுத்துவதாக ஆகும். நிறுவனம், ஊழியர்களுக்கும் மொபைல் தொலைபேசி வழங்க வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம், தொடர்ச்சியாக கோரி வருகிறது. ஆனால், இந்த கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
16.07.2025 அன்று, DIRECTOR (HR) உடன் நடைபெற்ற அதிகாரபூர்வ சந்திப்பின்போதும், BSNL ஊழியர் சங்கம், இந்தக் கோரிக்கையை எழுப்பியது. ஆனால், நிர்வாகம் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது, ஊழியர்களும் மொபைல் ஆப் மூலம் வருகையை பதிவு செய்வதை கட்டாயமாக்கி, ஒவ்வொரு மாநில நிர்வாகமாக உத்தரவுகள் பிறப்பிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், ஊழியர்களை மொபைல் ஆப் மூலம் வருகையை பதிவு செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது என கார்ப்பரேட் அலுவலகம், தலமட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவுகளை அனுப்ப வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், 28.07.2025 அன்று, DIRECTOR (HR)க்கு கடிதம் எழுதி உள்ளது.

