29.07.2025 அன்று, புது டெல்லியில், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. சமீபத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாடுகளில், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட / மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் பொதுச் செயலாளர்கள் பாராட்டப்பட்டனர்.
அதிமுக்கியமான பிரச்சனையான மூன்றாவது ஊதிய மாற்றம் மற்றும் மொபைல் ஆப் மூலம் வருகையை பதிவு செய்வது மற்றும் தமிழ்நாடு/ சென்னை தொலைபேசி மாநில தலைமை பொது மேலாளரின், ஊழியர் விரோத போக்கு ஆகியவற்றை இந்த கூட்டம் விவாதித்தது. புதிய தொலைத்தொடர்பு கொள்கை 2025 தொடர்பாக, ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்றதுடன், இந்தப் பிரச்சினையில் ஒரு பொதுவான அணுகுமுறையை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
நீண்ட விவாதங்களுக்குப் பின், மேலே கூறப்பட்ட பிரச்சனைகளை விவாதிப்பதற்கு, DIRECTOR (HR) மற்றும் CMD BSNL ஆகியோரை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
