29.07.2025 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டம், காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. தோழர் M.விஜயகுமார் தலைவர், தோழர் P.அபிமன்யு துணைத்தலைவர், தோழர் அனிமேஷ் மித்ரா பொதுச் செயலாளர், தோழர் இர்ஃபான் பாஷா பொருளாளர் மற்றும் தோழர் கணேஷ் ஹிங்கே துணை பொதுச் செயலாளர் ஆகியோர், இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அகில இந்திய தலைவர் தோழர் M.விஜயகுமார் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா அனைவரையும் வரவேற்று, ஆய்படு பொருட்களை, விவாதத்திற்கு முன் வைத்தார்.
1) கோவையில் நடைபெற்ற, 11 வது அகில இந்திய மாநாடு தொடர்பாக, ஒரு சுருக்கமான பரிசீலனை செய்யப்பட்டது.
2) ஊதிய மாற்ற பிரச்சினை தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை, இந்த கூட்டம் கவனத்துடன் பரிசீலித்தது. மரு. கல்யாண் சாகர் நிப்பானி DIRECTOR (HR), உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொதுச் செயலாளர் தெரிவித்தார். அதன் காரணமாக, ஊதிய மாற்ற பிரச்சனையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
3) ஊழியர்கள் மொபைல் ஆப் மூலம் வருகையை பதிவு செய்ய வேண்டும் என, நிர்வாகம் உருவாக்கிய கட்டாயத்தை, இந்த கூட்டம் கடுமையாக எதிர்த்துள்ளது. தேவை எனில் இந்த பிரச்சனையின் மீது இயக்கம் நடத்த வேண்டும் என்றும் இந்த கூட்டம் முடிவு செய்தது. தற்போது DIRECTOR (HR) பொறுப்பை ஏற்றுள்ள, திரு பாப்பா சுதாகர் ராவ் DIRECTOR (EB) அவர்களை, ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் சார்பாக சந்தித்து போது, இந்த பிரச்சனை விவாதிக்கப்பட்டது என்று பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா தெரிவித்தார். அவரும் இந்த பிரச்சனையை கவனிப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்தார்.
4) 28.07.2025 அன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற, ஆசிய பசிபிக் மண்டல TUI கூட்டம் தொடர்பாக, துணைத் தலைவர் தோழர் P.அபிமன்யு விவரித்தார்.
5) 11வது அகில இந்திய மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டதை தொடர்ந்து, தோழர் ஜான் வர்கீஸ் அவர்களுக்கு பதிலாக, ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவில், தலைவர் தோழர் M.விஜயகுமார் நியமிப்பது என்று இந்த கூட்டம் முடிவு செய்தது.
அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.