BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்கள், ஆத்தூர் கிளைகளின் இணைந்த மாதாந்திர கிளை கூட்டம், CoC சார்பாக, 26.07.2025 அன்று ஆத்தூரில் நடைபெற்றது. AIBDPA தமிழ் மாநில உதவி செயலர் தோழர் E. கோபால், கூட்டத்தில் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார்.
09.07.2025 அன்று நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில், நூற்றுக்கு நூறு சதவீதம், அதாவது, BSNLEU சங்க 11 தோழர்களும், ஆத்தூர் கிளையில், முழுமையாக போராட்டத்தில் பங்கு பெற்றனர். அவர்களை, கௌரவப்படுத்த, ஆத்தூர் BSNLEU கிளை சங்கம் முடிவு செய்தது.
26.07.2025 அன்று, CoC சார்பாக நடைபெற்ற, ஆத்தூர் கிளைகளின் இணைந்த மாதாந்திர கிளைக் கூட்டத்தில், வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட BSNLEU சங்க தோழர்களை, கிளை சங்கம் சார்பாக, AIBDPA தமிழ் மாநில உதவி செயலர் தோழர் E. கோபால், கதர் ஆடை அணிவித்து, கௌரவப்படுத்தினார். 11 தோழர்களில், 9 தோழர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.